Wednesday, June 16, 2010

சினிமா..ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...

சினிமா..சினிமாவே பார்த்திராதவர் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதிசயமான கேள்விதான். எனது நண்பன் ஒருவன் இதுவரை ஒரு சினிமாக்கூட பார்த்ததில்லை. அவனுக்கு வயது 57. B.A.B.Ed., படித்துள்ளார். அது சரி..தண்ணி போடுவாரா? இல்லை.. சிகரெட்..புகையிலை.. வகைகள்..இல்லவே இல்லை.. கவுண்டமணி பாணியிலே கமெண்ட் கொடுக்கறீங்களா? கவலையே இல்லை. இப்படியும் சிலர் உங்களோடும் இருக்கத்தான் செய்வார்கள்.

நாம சினிமா ஞாயத்திற்கு வருவோம். சினிமாவைப்பற்றி யோசிப்போம். நம்ம வாழ்க்கையிலே இந்த சினிமாவை முதன் முதல் எப்ப பார்த்தோம். ஏதாவது நினைவு வருகிறதா? ஏதோ கொஞ்சம் ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவில்... (அப்பவெல்லாம்..மைல்தானுங்க.. அதற்கு பின்னாலதான் கிலோமீட்டர்..ஒ..உங்களுக்கு கி.மீ. ல சொன்னாத்தான் புரியும்..சரி.சரி..3.கி.மீ.) தொலைவிலுள்ள வசந்தா தியேட்டருதான் எனக்கு சினிமாவை காட்டியது. அது சரி..முதன் முதலில் யார் சினிமாவுக்கு கூட்டிச் சென்றார்கள்..படுத்துகிட்டே யோசித்து கண்டுபிடித்து விட்டோமல்ல. விவசாய தொழிலாளர்கள், பல்வினை கலைஞர்கள் அதிகமாக அன்றும் இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் எங்கள் கிராமத்தில் ஒரு தச்சு தொழில் கலைஞர் தான் என்னை சினிமாவுக்கு முதன்முதலில் அழைத்துச் சென்றார். படம் என்ன? யாரோ இரண்டு பேர் தண்ணீருக்குள் சண்டை போடும் காட்சி மட்டும் உடனே ஞாபகத்திற்கு வருது.

எம்.ஜி.ஆர் முகம் மட்டும் டக்குன்னு தெரியுது. ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து விட்டோம்ல்ல. நான் பார்த்த முதல் படம் நல்லவன் வாழ்வான். இறுதி காட்சியில் எம்.ஜி.ஆர்க்கும் எம.ஆர். ராதாவுக்கும் தண்ணீர்க்குள் ஃபைட் நடக்கும்.... ஃபைட்டுன்னு சொன்னாத்தான் ஒரு எபக்ட் கிடைக்குதுல்ல. நாங்க அப்ப இருந்துல்ல தமிழை வளர்த்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லாததால் எங்களிடம் பேசினார்கள். நாங்கள் அறை குறை படிப்பு..உங்களிடம் பேசி சொல்லி கொடுத்தோம். நீங்க அப்படியா? நல்ல தமிழை உங்க குழந்தையுடன் பேசிப்பாருங்கள்..தமிழ்தானே வளரும்... கிழவன் சொன்னா கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா? (பழமொழிக்கு தனி கதை இருக்கு...)

உங்க குழந்தை மம்மீ..டாடீன்னு சொல்ல வைத்து அழகுபார்க்கிறவங்களாச்சே நீங்கள்..எங்க காலத்திலே அப்பான்னு கூட சொன்னதில்லை. ‘அய்யன்’னு சொல்ல சொல்லுவாங்க. இன்றும் எங்க அய்யன் அப்படின்னுதான் சொல்ல வருதுங்க. என் குழந்தையிடம் அப்பான்னு சொல்லுன்னா சொல்லமாட்டுது. நர்சரியில் டாடீன்னு சொல்லி கொடுத்து அப்பான்னா கேலியா தெரியுற அளவுக்கு ஆயிடுச்சி. ஆரம்பத்திலேயே திருத்தாதது எங்க தப்புதான். ஆனா நீங்க மெத்த படித்தவங்களாச்சே. நாங்க செய்த தப்பையே நீங்களும் செய்திட வேண்டாம். இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.

கிராமத்தில் ஆரம்பத்தில் எல்.டீ பேங்க் அப்படீன்னாத்தான் தெரியும். நில வள வங்கி அப்படீன்னு அரசு பெயர் மாற்றிய போது சங்கடமாத்தான் இருந்தது. இப்ப எல்.டீ பேங்க்ன்னா என்னன்னே தெரியாது. ஆரம்பத்தில் அரசும் பெயர்களை மாற்றி தமிழை வளர்க்க பார்த்தது. ஆனால் வீட்டில் தமிழை வளர்க்க மறந்து நர்சரி பள்ளிகளிடம் தமிழை வளர்க்க விட்டுவிட்டது. அதனால்தான் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றியும் நாம் பஸ் ஸ்டேண்டுலேயே நிற்கிறோம். சினிமாவிலே ஆரம்பித்து சினிமா தமிழை வளர்க்க பயன்படுது. நல்லதுதானே.

விபரம் தெரிந்த பின்பு பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? என சுயநலமில்லாவரின் தமிழ் வரிகளுக்காக தேடி ஓடிஓடி சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று சுயநலத்துடன் கூடிய தமிழ்வரிகள் பெண் சிங்கமாக தோற்குது. அந்த கரகரத்த குரலில்..பூம்புகார்..இதுதான் இன்றைய பூம்புகார்...காவேரி புகும் பட்டிணம் எத்தனையோ ..என ஆரம்பித்த வரிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்து பாராட்டு வாங்குவேன்..ஆனால்.. வேண்டாங்க விடுங்க......

எங்களுரிலிருந்து நானும் சில நண்பர்களும் மிதிவண்டியில் பழனி சென்று ஒரே நாளில் நான்கு சினிமா பார்த்தோம். காலை பத்து மணி நான் ஆணையிட்டால், மதியம் மோட்டார் சுந்தரம்பிள்ளை, இரவு முதல் காட்சி அன்பே வா, அடுத்து இரவுக்காட்சி சித்தி..பார்த்து 35 கி.மீ திரும்பி வந்து காலையிலே நல்ல குடி நாச்சி மாதரி பள்ளிக்கு சென்று விடுவோம். எங்க காலத்திலே வந்த சினிமாக்களை நினைத்தாலே இன்னைக்கும் இனிக்குதே. பாசமலர்,பாகப்பிரிவினை,படிக்காத மேதை..போன்ற சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த ப வரிசை திரைப்படங்கள், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத்தட்டாதே, தாலிபாக்கியம் என எம்.ஜி. ஆரின் தா வரிசை திரைப்படங்கள், நெஞ்சில் ஒரு ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, பஞ்சவர்ணக்கிளி போன்ற நெஞ்சை தொட்ட திரைப்படங்கள் , திருவிளையாடல்,கந்தன் கருணை என A.P. நாகராஐன் அவர்களின் தேன் தமிழ் நடையில் வெளிவந்த பக்தியுடன் கூடிய படங்கள் எல்லாமே எங்க காலத்தில் வெளி வந்தவைகள்தான்..எல்லா படத்திலும் எல்லா பாட்டும் இன்னைக்கும் என்னைக்கும் மனசிலே நிற்குமே.

ஆயிரத்தில் ஒருவனா? எங்க வீடடுபிள்ளையா? எங்கள் தங்கமா? எம்.ஜி.ஆரின் படமென்றால் முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் பார்த்தால்தான் பசியே தீரும். அதுவும் எங்கள் ஊரில் நான் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற பொருளாளர் ஆயிற்றே. பூந்து விளையாடி இருக்கோம்ல்ல. கொட்டும் முழக்கோடு ஊர்வலமா சென்று கொடி கட்டி இனிப்பு வழங்கி பேனர் கட்டி பார்த்து ரசித்திருப்போம். படத்தில் எல்லோரும் நடிப்பார்கள்..இப்போ எல்லோரும் துடிக்கிறார்கள். நீங்க சுறாவை பார்த்திட்டு வந்த கடுப்பில் இருப்பீர்கள்.. நான்வேற கடுப்பை ஏற்றி விட்டால் எக்கு தப்பா ஏதாவது ஆகிப்போச்சுன்னா? மே .18.க்கு பின்னால மனது இருகி போய்கிடக்கிறோம்..என்ன நடந்தாலும் ஒண்ணும் ஆகாது..அப்படிங்கிறீங்களா? அதுவும் உண்மைதான்.. நான் வரட்டுங்களா......


24 comments:

ராம்ஜி_யாஹூ said...

I have one christian friend he has not seen cinema his age is now 28 yrs old.

My mother has not seen a cinema for last 20 years. She saw the film Trisulam,

நாடோடி said...

//இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.///

க‌ண்டிப்பா முய‌ற்ச்சி ப‌ண்ணுறேன்.

ந‌ல்ல‌ ஞாப‌க‌ம் ஐயா.... ப‌ழைய‌ நினைவுக‌ளை அசை போட்டு இருக்கீங்க‌..

VELU.G said...

நல்ல பதிவு

என் ஒரு நண்பன் கூட இதுவரை சினிமாவே பார்த்ததில்லை. வயது 35 இருக்கும். ஆடிட்டராக இருக்கிறான். ஆனால் இதுவரை தியேட்டர் பக்கமோ, டி.வி, விடியோ எதுவுமே பார்த்ததில்லை. அவர்கள் வீட்டில் இது எதுவுமே இல்லை

சிநேகிதன் அக்பர் said...

நாங்களும் சினிமா பார்க்கிறவங்கதான். ஆனா நல்ல சினிமாவை எப்பமாச்சுதான் பார்க்க முடியுது அய்யா. சார்னு கூப்பிடவனை அய்யான்னு கூப்பிட வச்சுட்டிங்களே அய்யா.

நினைவலைகள் அருமை. 35 கி.மீ போய் படம் பார்க்குற அளவுக்கு இருந்திருக்கீங்க பாருங்க. நல்ல ரசிப்புதன்மை. நாங்களும் பழைய படங்களை விரும்பிப்பார்ப்போம்.

பகிர்வுக்கு நன்றி அய்யா.

Chitra said...

அமெரிக்காவில் ஆமிஷ் மக்கள் மற்றும் சில conservative மக்கள், இன்னும் வீடுகளில் டிவி வைத்து கொள்வதில்லை. ஒரு சினிமா கூட பார்த்ததில்லை...
தங்கள் குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறார்கள்.
நல்ல துள்ளல் நடையுடன் ஞாபங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்....

/////நாங்க அப்ப இருந்துல்ல தமிழை வளர்த்து வைத்திருக்கிறோம். எங்களுக்கு படிப்பறிவு இல்லாததால் எங்களிடம் பேசினார்கள். நாங்கள் அறை குறை படிப்பு..உங்களிடம் பேசி சொல்லி கொடுத்தோம். நீங்க அப்படியா? நல்ல தமிழை உங்க குழந்தையுடன் பேசிப்பாருங்கள்..தமிழ்தானே வளரும்... கிழவன் சொன்னா கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா? (பழமொழிக்கு தனி கதை இருக்கு...)///


.... இந்த கதையையும் விரைவில் சொல்ல வேண்டும், பெரியப்பா.!

கமலேஷ் said...

நல்ல நினைவலைகள்...

sathishsangkavi.blogspot.com said...

அழகான நினைவுகள்...

ஈரோடு கதிர் said...

ஏனுங்கனா...

என்னுமோ பதட்டமா இருக்றாப்ல இருக்கு

பழய பழ்ன்சாமியண்ணனக் காணலயே

என்னுங் சமாச்சாரம்

தெய்வசுகந்தி said...

நல்ல கொசுவத்திங்க!!! அப்படியே அந்த பழமொழி கதையையும் சொல்லீருங்க!!!!!!!!!!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
ஏனுங்கனா...

என்னுமோ பதட்டமா இருக்றாப்ல இருக்கு

பழய பழ்ன்சாமியண்ணனக் காணலயே

என்னுங் சமாச்சாரம்//

ம்கும். இவரு பதட்டமா பேர தப்பா அடிச்சிட்டு எங்கண்ணன சொல்றாரு.

ஆர்.வேணுகோபாலன் said...

சினிமாவே பார்க்காத மனிதரா? ஆச்சரியமாக இருக்கிறது! ஒரு முறை நடிகர் திலகத்தைப் பார்த்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை,"தம்பி, நீங்க என்ன பண்ணறீங்க?" என்று கேட்டாராம்! :-)

இப்படியும் அபூர்வப் பிறவிகள் இருக்கத் தான் செய்கிறார்கள் போலும்!

நல்ல பதிவு

ஜெய்லானி said...

நானும் படம் பாக்குறத விட்டு நாளாச்சி.. இப்பவெல்லாம் கார்டூன் மட்டுமே நல்லா இருக்கு . மனசுக்கும் பிடிக்குது..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா.... நீங்க எங்க அப்பா சொல்ற மாதிரியே சொல்றீங்க... எங்க அப்பா சனிக்கிழமை தவறாம பத்து கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சு போய் எம்.ஜி.ஆர் படம் பாப்பாராம்... அதுவும் அடுத்த படம் வர்ற வரைக்கும் ஒரே படத்த பல தடவை பார்ப்பாராம்... நல்ல பதிவு

ஹேமா said...

வாசித்துக்கொண்டே வந்தேன்.சுவாரஸ்யமாய் அன்றைய உலகில் தாத்தா கைபிடிச்சு நடக்கிறாப்போல ஒரு உணர்வு.

//மே .18.க்கு பின்னால மனது இருகி போய்கிடக்கிறோம்..//

இதை வாசித்தவுடன் நானும் இறுகி இருந்துவிட்டேன்.

ப.கந்தசாமி said...

ஒரு சின்னக்கதைங்க:

ஒரு ஊர்ல வெளியூர்க்காரன் ஒருத்தன் இன்னொருத்தனைக் கேட்டானாம். "தம்பி, இந்த ஊர்ல புகைவண்டி நிலையம் எங்க இருக்கு" அப்படீன்னு. அவன் திருதிருன்னு முளிச்சானாம். இவன் திருப்பியும் கேட்க, அவன் முளிக்க, கடைசியா இவன் "அதாம்ப்பா ரயில்வே ஸ்டேஷன்" அப்படீன்னானாம். அவன் "மொதல்லேயே இப்படி ஒழுங்கா தமிழ்ல கேட்டிருக்கலாமில்லையா, என் உயிரை எடுத்துட்டியே" ன்னு சொல்லி அப்புறம் வழி சொன்னானாம்.

இன்னிக்கு தமிழோட நிலைமை அப்படி இருக்கு.

புலவன் புலிகேசி said...

//இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.//

மிக்க நன்றி ஐயா. நான் யாருக்கு வாழ்த்து சொல்வதானாலும் தமிழில் சொல்வதை வழக்காமாகக் கொண்டவன்.

Anonymous said...

My father has not seen a cinema for last 50 years.he is an ex emplaye of khadi board.now he is no more. - gitapriyan@yahoo.com

ப.கந்தசாமி said...

போட்டோ மாத்திட்டீங்க போல இருக்கு. கொஞ்ச நாளா வேலை அதிகம். அதனால பதிவு வேலைகள் தாமதம்.

Asiya Omar said...

அனுபவம் எழுதிய விதம் அருமையாக இருக்கு,என்னுடன் படித்த தோழி திருப்பூர் ஊத்துக்குளி அவள எங்கஅய்யன் எங்க அய்யன் என்று அடிக்கடி குறிப்பிடும் பொழுது அது அப்ப எனக்கு மிகவும் பிடித்திருந்தது,அதன் பின்பு இப்ப தான் அந்த வார்த்தையை கேட்கிறேன்.என்னுடைய பதின்ம வயதில் எனக்கு பழைய படம் பிடிக்கும் என்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படமும் நான் பார்த்த அனுபவம் நினைவு வருகிறது.என் ப்ளாக்கிற்கு வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றி.

Vidhya Chandrasekaran said...

அழகான நினைவுகள்.

Admin said...

நல்ல பகிர்வு.. பகிர்வுக்கு நன்றிகள்...

அன்புடன் மலிக்கா said...

அய்யா அருமையான பதிவு.

//இன்று முதல் வீட்டில் மட்டும் தனித்தமிழ் பேசிப்பழகலாம். ஆரம்பத்தில் சங்கடமாக கூட இருக்கும். போக போகச் சரியாகும்.///

இடையிடையே பேசுவதுண்டு என்ன கொஞ்சம் கிண்டல் பண்ணுவாங்க அதெல்லாம் காதில்போட்டுகிறதில்லை.

அண்ணாமலை..!! said...

ஐயா..நல்ல கட்டுரை!
தமிழோடு உங்கள் ஞாபகங்களும்!
உங்க எழுத்துல என்னமோ இருக்கு!!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வருக வருக...