Monday, November 1, 2010

ஒரு எழுத்துப் பிரச்சனை...ங்க...

எல்லோருக்கும் வணக்கம். நான் நலம். நீங்க நலமா...பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு. எதையாவது பேசனும் அப்படின்னு நெனைச்சுகிட்டு இருந்தப்போ..மாமா என்ற அழைப்புடன் உறவினர் ஒருவர் வந்திருந்தார். வாங்க..வாங்க என வரவேற்று அமரவைத்துபோது.. அழகா தட்டத்தில் தண்ணிருடன் உங்க மொழியில் தங்கமணி.. தண்ணிர் கொடுத்தபடி வரவேற்பு... காபி சாப்பிடுகிறீர்களா?, சாப்பிட்லாம்ங்க....நேற்று இங்க நல்ல மழை போல இருக்குதுங்க.. நம்ம ஊருபக்கம் மழை இல்லைங்களா.? இங்கே போல இல்லைங்க..சும்மா சர்வ வெள்ளம் போல... இப்படியே போச்சுன்னா.. குடிதண்ணிக்கே திண்டாட்டம் வந்திரும்ங்க....புதிதாக பார்க்கிறவர்கள் யாரும் இப்படித்தான் பேச்சை தொடங்குவார்கள்..

ஒரு விசயமாய் உங்களை பார்க்கலாம்மின்னு வந்தேனுங்க..எனது மகள் ஹரிணி பிறப்புச் சான்றிதழில் ஒரு தப்பு ஏற்பட்டு விடட்துங்க..அதை அப்ப சரியா பார்க்காமல் படிக்காமல் விட்டது தப்பா போச்சுங்க..என அவரின் மகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துக்காண்பித்தார். எனது பெயரையும் எனது மகளின் பெயரையும் சரியான உச்சரிப்புடன் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். எனது மனைவி பெயரை கோகிலவாணி என்பதை கோகிலமணி என்றுபதிந்து இருக்கிறது. என் மனைவியின் பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை அனைத்திலும் கோகிலவாணி என்றே உள்ளது..என்ன செய்யலாம்..மாற்றலாமா..இப்படியே விட்டு விடலாமா.. இதில் ஒண்ணும் பிரச்சனையில்லைங்க.. ஒரே எழுத்துத்தான் பிரச்சனை.. நம்ம மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி..ஆகா..வேலை இல்லாம வீட்டில் அதைஎடு.. இதை கொண்டா.. அப்படின்னு அதிகாரம் பண்ணி காலத்தை கடத்துவதிலிருந்து இரண்டு நாளைக்கு விடுதலை.. கவலையை விடுங்க..மாமா எதற்கு இருக்கேன்..நான் பார்த்துக்கொள்கிறேன். முகவரி சான்றுகொடுத்து பெயரை மாற்றி கொள்ளலாம் எனச் சொல்லி...கவனமா படியுங்கள்..நகலை மட்டும் கொடுத்து விட்டு செல்லுங்கள்..மீதியை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன்.

மறுநாள் அய்யா அதி காலையில் எழுந்து சுபயோக சுபவேளை பார்த்து திருத்த பிறப்புச் சான்றிதழ் வாங்க 35 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். காலை மணி 10.30. பிறப்பு இறப்பு பதிவாளர் அறை திறந்தே இருந்தது. யாரையும் காணோம். சரி எங்காவது காபி..கீ.பி..சாப்பிட சென்று இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நின்று கொண்டே இருந்தேன். கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. யாரும் வருவதாக தெரியவில்லை. மே18 யே பொறுத்தவன் இதை பொறுக்க மாட்டேனா. சரியாக 12.24 உதவியாளரைப் போல் ஒருவர் ஒடி வந்து எதையோ எடுத்துக்கொண்டு ஒடினார். ஏதாவது கேட்கலாம் என்றால் ஆள் ஒடியேவிட்டார். சரியாக மணி 1.20 இரண்டு பேர் வந்தார்கள்.ஒருவர் ‘என்னங்க வேணும்? எனக்கேட்க, நான் என் கையில் இருந்த விண்ணப்பத்தை காட்ட..

அதை படித்து விட்டு...அடடே.. ஒரு எழுத்து பிரச்சனை.. சார் அங்கே செல்போன் பேசிக் கொண்டு இருக்காரே அவர்தான் உங்க பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். அவரைப் பார்த்தேன். அவரோ இன்னொரு பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். செல் போனும் கையுமாகவே இருந்தார். இடையில் குறுக்கிட்டால் ‘இன்று போய் நாளை வா’ என சொல்லி விடுவாரோ என்ற பயம். அவரே பேசி முடித்து விட்டு என்னை பார்க்க..நான் உடனே விண்ணப்பத்தை கொடுக்க

அவர் வாங்கி படித்து விட்டு...நாங்கள் எற்கனவே கொடுத்த அசல் சான்றிதழை கேட்டார். நான் ‘அசல் எடுத்து வரவில்லைங்க’ எனச் சொல்ல. அவர் ‘அப்படியா..அப்ப அசல் சான்றிதழ் எடுத்து கொண்டு நாளை வாருங்கள்’ என்றார். எனக்கு சுருக்கென்றது. தப்பு நம்ம மேலேதான் என எண்ணிக்கொண்டு, நம்ம மாப்பிள்ளைக்கு அடித்தேன் போனை. ‘என்னங்க அசல் சான்றிதழை கொடுக்காம போய்விட்டிர்கள்’ என்றேன். ‘நீங்கதானே மாமா நகலைமட்டும் கொடுங்க போதும்’ என்றீர்கள். ‘அப்படிங்களா..தெரியாம சொல்லிட்டேன்.. நாளைக்கு என்னிடம் சேரும்படி அசலை கொடுத்து அனுப்புங்கள்’ என்றேன். சரிங்க ஒருநாள் எப்படியோ நகர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலை ஆள்கின்றவரை வணங்கிவிடடு. அசல் சான்றுடன் சரியாக பத்து மணிக்கு சென்றேன். நம்ம அதிகாரி இருந்தார். நல்ல நேரம் என எண்ணிக் கொண்டு வணக்கம் வைத்தேன். அசல் சான்றுடன் வந்திருக்கிறேன் என்றேன். நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் பொறுங்க அறைச்சாவி வரட்டும் என்றார். சாவி வந்தது. உள்ளே சென்று நம்ம விண்ணப்பத்தை ஆய்வு செய்தார். வெளியே வந்து, அய்யா குழந்தை பிறந்த மருத்துவமனையிலிருந்து திருத்த அறிக்கை பெற்று வரவண்டும் என்றார். நான் ‘ஏன்?’ என்றேன். ‘பின்னே’ என்றார். ஓ..நமக்கு நேரம் சரியில்லை என்ற நம்பிக்கையில் தெரிந்த நண்பர் தயவில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்றேன். விசயத்தை சொன்னேன். ஒண்ணும் பிரச்சனையில்லை கோகிலவாணி என்ற பெயருக்கு புருப் நகலுடன் எழுதிக் கேட்டார்கள். நல்லவேளை ஓட்டுனர் உரிமம் கையில் இருந்தது. எழுதிக் கொடுத்தவுடன் வாங்கி கொண்டு ‘இன்று போய் நாளை வாங்க’ என மரியாதையாக சொன்னார்கள். மரியாதையா சொன்னதால் மரியாதையாய் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் ஆண்டவர்களையும், ஆள்பவர்களையும் நினைத்துக் கொண்டு மருத்துவமனையில் திருத்த அறிக்கையுடன் சென்றேன். அய்யா அன்புடன் வரவேற்றார். வாங்கிப் பார்த்தார். விண்ணப்ப வில்லை ஒட்டி பெட்டியில் போடச் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். எப்ப வருவதுங்கு எனக் கேட்டேன். மறுநாள் மாலை வரச்சொன்னார். சென்றேன்..வென்றேன்...

சான்றிதழிலுடன் வெற்றிப்புன்னகையுடன் வெளியே வந்தேன். வம்பர் ஒருவர் சந்தித்தார். மகிழ்ச்சியுடன் தேநீர் வாங்கி கொடுத்து நலம் விசாரித்ததார். என்ன விசியமா வந்தீங்க என்றார். நான் ஒரு வாரமாக அலைந்து ஒரு எழுத்தை திருத்த கதையைச் சொன்னேன். ‘அடப் போய்யா, நீயெல்லாம் எப்படியய்யா அரசு பணியில் இருந்தாய் ஒரு இருநுறு ருபாயை கொடுத்திருந்தால் அன்றே அந்த சான்று கிடைத்திருக்கும்’ என்றார். நண்பா கொடுக்க நான் ரெடி, யாரிடம் கொடுப்பது. யாரும் என்னிடம் கேட்கவில்லையே என்றேன். ‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார். ‘அப்படிங்களா..’என கேட்டு விடைபெற்று வீடு திரும்பினேன்.

வீட்டுத்தொலைக்காட்சியில்..........சுத்துதே சுத்துதே பூமி..போதுமடா போதுமடா சாமீ.. என்கிற பாட்டு. இதனால் அறிவிப்பது என்னவென்றால் சொந்தங்களே... பிறப்பு இறப்பு சான்றுகள் பெறும்போதே கவனமா பொறுமையா எழுத்துக்கு எழுத்து படித்து வாங்குங்கோ. அப்படி வாங்கின்னா உங்க வீட்டில் யாருக்கேனும் ஒரு வாரம் அலைச்சல் மிச்சம் சொந்தங்களே. தீபாவளி யாராவது கொண்டாடினால் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...சுனா..பானா.

***********************************************

24 comments:

vasu balaji said...

hi hi. நான் பேரே போடாம ஆம்பிளைக் குழந்தைன்னு வாங்கி வச்சிருந்தேன். எப்புடியோ புள்ள நம்மூர்ல படிப்பு முடிச்சிருச்சி:))

ஜோதிஜி said...

சூனா பானா என்ற பெயரே பல வாழ்க்கை அனுபவங்களை எனக்கு உணர்த்துகிறது. அப்புறம் நான்கு வயது ஆன போது தான் குழந்தைகளின் சான்றிதழ்களை பெற முடிந்தது.

Anisha Yunus said...

அனுபவத்தையும் நல்லா எழுதியிருக்கீங்க அய்யா. ஹ்ம்ம்...என்ன பண்ணாலும் நம்ம நாடும், ஆள்பவர்களும் திருந்தவே மாட்டாங்க !! :(

மதுரை சரவணன் said...

//‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார். ‘அப்படிங்களா..’என கேட்டு விடைபெற்று வீடு திரும்பினேன்.//



ரெம்ப அப்பாவியா இருக்கீங்கலே ... ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டியதை ..இப்படியா இழுக்கிறது.. நம்ம நாடு உருப்படாததற்கு காரணம் புரிந்ததா..?


பகிர்வுக்கு நன்றி. ..

Chitra said...

‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ என்றார்.


...... ஜெய் ஹிந்த்!



இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

கோகிலாவாணியை கோகிலா`மணி` என்று டைமிங்காக வைத்தார்களோ என்னவோ?

vaarththai said...

//‘இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் தான் கொடுத்து நம்ம இந்திய மானத்தை காப்பாத்தனும்’ //

who is that i*d#i^o#t. Bribery may exist for any reason. but, no doubt, it flourishes due to this awkward mentality.
Nothing goes hell if the process takes a week.

தாராபுரத்தான் said...

நன்றிங்க
வானம்பாடிகள்
ஜோதிஜி
அன்னு
மதுரை சரவணன்
சித்ரா
ப்ரியமுடன்வசந்த்
vaarththai

Thoduvanam said...

என்று தணியும் ...

ஜோதிஜி said...

அய்யாஉங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

eswar said...

hai anna,
welcome.your's way of execution is so sweet.This is also kind of social service.So proudly go get your path. I'll more expetation from you.
thank & regards

ப.கந்தசாமி said...

//காபி..கீ.பி..சாப்பிட//

கி.மு., கி.பி. கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்னங்க கீ.பி.?

vinthaimanithan said...

//வேலை இல்லாம வீட்டில் அதைஎடு.. இதை கொண்டா.. அப்படின்னு அதிகாரம் பண்ணி காலத்தை கடத்துவதிலிருந்து இரண்டு நாளைக்கு விடுதலை.. //

இப்பிடியெல்லாமா யோசிப்பாங்க? என்னா ஒரு வில்லத்தனம்???

vinthaimanithan said...

லஞ்சம் கொடுத்தா பொறக்காத புள்ளைக்கு பிறப்புச் சான்றும், சாகாத மனுஷனுக்கு இறப்புச்சான்றும் வாங்கலாம்.
இது தெரியாமலா கவுருமெண்டுல வேலை பாத்தீங்க? ம்ஹூம்! மொதல்ல உங்க மேல விசாரணை கமிஷன் போடணும்... ஏன் லஞ்சம் வாங்காம தேசியமானத்தை இழிவு படுத்துனீங்கன்னு!

பித்தனின் வாக்கு said...

என்னங்க அய்யா, நம்ம ஊரு முனிசிபாலிட்டில வேலையா, சரிதான்.. நானும் தங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் ஆனா ஒவ்வேறு தடவை ஊருக்கு வரும் போதும் எதாவது பிஸி ஆகிவிடுகின்றது. அடுத்த முறை பார்ப்ப்போம். நன்றி அய்யா

dolphin naseer said...

Hellow Sir

Arumaiyana Vishayam

சிவகுமாரன் said...

எல்லோருக்கும் நேரும் அனுபவங்கள்.
சுவைபட சொல்லி இருக்கீங்க

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. உதவி செய்யப் போயி... ஒரு வாரம் அலைச்சலா...?? இதுக்கு ரெண்டு நாள் வீட்டு வேலையே பெட்டெர்-ஆ? :-)))

200 ரூபாயின் மகிமை.....நமக்கு தெரியாம போச்சே...!! ஹ்ம்ம்..

நல்ல அனுபவம்.. பகிர்வுக்கு நன்றி.. :-))

THOPPITHOPPI said...

பகிர்வுக்கு நன்றி

சிவகுமாரன் said...

புதிய பதிவுகள் ஒன்றும் வரவில்லை ஏன் அய்யா

shammi's blog said...

உண்மைங்க அப்பா.. ..நீங்க மகளே என்று சொல்லும் போது நானும் அப்பா என்று அழைப்பது தானே முறை ..கட்டாயம் அடுத்த முறை உங்களுக்கு இவரை அறிமுகம் செய்கிறேன் ..ஒரு விஷயம் என்னவென்றால் என் அப்பாவின் பெயரும் பழனிசாமி தான் ..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாங்கள் எற்கனவே கொடுத்த அசல் சான்றிதழை கேட்டார். நான் ‘அசல் எடுத்து வரவில்லைங்க’ எனச் சொல்ல. அவர் ‘அப்படியா..அப்ப அசல் சான்றிதழ் எடுத்து கொண்டு நாளை வாருங்கள்’ என்றார்.//



பிறப்புச் சான்றிதழ் என்பதில் அசல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தமுடியுமா என்று தெரியவில்லை. அதில் கீழ்கண்ட விவரங்கள் இந்த மாவட்டத்தில் இந்த ஊரில் உள்ள பிறப்புப் பதிவேட்டில் எடுக்கப் பட்டவை என்று சான்றளிக்கப் படுகிறது என்றுதான் வாசகங்கள் இருக்கும்.

இன்னார், இன்னாருக்கு இவர் பிறந்தார் என்று சான்றளிக்கப் படுகிறது என்றெல்லாம் இருக்காது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அந்த சான்றிதழில் உள்ள பதிவேடு, பக்கம் ஆகியவற்றை எடுத்து அவற்றில் திருத்தம் செய்வதற்குரிய வழிமுறைகளில் திருத்தி உங்களுக்கு புதிய சான்றிதழி கொடுத்து விடலாம். அவற்றை திருத்துவது என்பது சட்டம் சார்ந்த சில செயல்பாடுகள் இருப்பதால் சில நேரங்களில் சில நாட்கள் கால தாமதம் ஆகி இருக்கலாம்.

அசலைக் கொண்டு வா என்பதெல்லாம் தேவையில்லாத வேலை. நம் கையில் இருக்கும் அனைத்துமே நகல்தான் என்பது என் கருத்து.

அன்புடன் மலிக்கா said...

அனுபவத்தையும் நல்லா எழுதியிருக்கீங்க ..