Saturday, January 30, 2010

தெரிந்தால் சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....

சென்ற வாரம் பத்திர பதிவுக்காக சென்றிருந்த போது பத்திர பதிவு குறித்த ஆவணங்களைப் படிக்க நேர்ந்தது. இன்றும் பத்திர பதிவுகளில் ஆட்சி செய்யும் இந்த சொற்கள் தமிழ் சொற்கள்தானா என்ற கேள்வி? பதிவு சொந்தங்களை கேட்டுவிடுவோமே என துணிந்துவிட்டேன்.

படித்த சொற்கள்....

பவர் ஏஐண்டாக, லேட், ஜெனரல் பவர் பத்திரம், சர்வ சுதந்திரம்,
கிரையம், சுவாதீனம், பூர்த்தி செய்து கொடுக்கவும், சகல சர்வ வில்லங்கம்,
சர்க்கார், சகல நமுனா, கிரையம், இரத்து, சகல எண்டார்சுமெண்டு,
வக்காலத்து, பைசல், பிரதி பிரயோஐனம், ரீசர்வே, பஞ்சாயத்து, நஸ்டம்,
நெம்பர், வழித்தட பாத்திய சகிதம், தம் மைனர் மக்கள், கார்டியன், விலாசம்...

- இவை யெல்லாம் தமிழ் சொற்கள் தானா? காலங் காலமாய் தொடர்வதால் அப்படியே தொடர்கிறார்களா? தமிழை வாழ வைக்கவே வாழ்ந்து கொண்டு, தமது வாரிசுகளையும் வாழவைப்போர் ஏன் வாய் திறப்பதில்லை?

தெரிந்தா சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....



Thursday, January 28, 2010

தாராபுரத்தான்: நம்புவோம்...

தாராபுரத்தான்: நம்புவோம்...

நம்புவோம்...

உறவு பெரியவர் ஒருவர் காலமாகி விட்டதால் அதை விசாரிக்க செல்ல வேண்டும். நல்லதுக்கு போக முடியவில்லை என்றாலும் கெட்டதுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பது மரபு ஆயிற்றே. பல நாள் பகை கூட இறப்பில் ஒன்று சேர்வது உண்டு. பெருந்துறை அருகே இன்னும் கிராமச்சுவடு தென்படுகின்ற ஒரு கிராமத்திற்கு பெரியவர் மரணத்தை விசாரிக்க சென்றேன். அவர் காலமாகி மூன்றாவது நாள் . அன்று உறவுகள் ஒன்று கூடி விருந்து படையல். நாம் விருப்பபட்டதை நமக்காக சமைத்து அவருக்காக கூடி உண்பது. முன்பெல்லாம் தினமும் ஒரு உறவு என முறை வைத்து மூன்று மாதங்கள் கூட விருந்து நடைபெற்றது உண்டு. இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து மகா விருந்து வைத்து ஒரே நாளில் முடித்து விடுகின்றனர்.


விருந்து வீட்டில் கேலியும் கிண்டலுமாக உறவுகள் சொல்லி உண்டு மகிழ்ந்து இறப்பு வீட்டை கலகலப்பாக்கி விடுகிறார்கள். அதுலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவேணும் உறவில் யாராவது விரைவில் டிக்கெட் வாங்க வேண்டும் என எண்ண தோன்றும். கூட்டு குடும்பங்களின் சங்கீதம் கேட்காத இந்த நாளில் தன் இறப்பிலாவது ஓன்று கூடி மகிழ்வதை இறந்தவரின் ஆன்மா நிச்சியம் கேட்கும் என நம்புவோம்.




Monday, January 25, 2010

பின்னி பெடலை எடுக்கிறாங்கல்லோ...

பின்னி எடுக்கிறோமில்ல.....

பதிவுபோடறதை விட பின்னூட்டம் போடுவது சுவையாகத்தான் இருக்குது. ஒரே நாளில் உலக முழுவதுமுள்ள நமது சொந்தங்களின் மனவோட்டங்களை படித்து...பின்னூட்டம் போட்டு, மீண்டும் நம்ம பின்னூட்டத்தை பதிவர் படித்து அதற்கு பதிலூட்டம் ஏதாவது போட்டிருக்காரா? என பார்த்து அதற்கும் ஒரு பின்னூட்டம் போட்டு... போட்டு... தள்ளறாங்களே.... இவர்களுக்கு வேற வேலையே இல்லையா ? என சிலநேரங்கள்ல நினைக்க தோணுது. அதே வேலையா அலையறாங்களே... தூங்கறாங்களா இல்லையா? அதுவும் நம்ம கொங்கு நாட்டு தங்கங்கள் அதுதான் ஈரோடு பதிவர் வகையறா செம ஸ்பீடு. எந்த பதிவில் பார்த்தாலும் ஈரோடு கதிர், ஆருரான்..வானம்பாடிதான் நமக்கு போட்டி. நடுவிலே பழமை பேசி வேற.. விடாதீங்க தம்பீகளா, நானும் உங்க ஸ்பீடுக்கு வரலாம்ன்னுதான் பார்க்கிறேன், ஆசை இருக்குது, ஒண்ணும் முடியல்லை, இருந்தாலும் ஒருகை பார்க்கிறன்ல்ல.

அடடா....இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு பிறந்திருக்க கூடாதா? என எண்ண த்தோன்றுகிறது. நம்ம ஈரோட்டு பதிவர்கள் பின்னி பெடலை எடுக்கிறாங்கல்லோ...நேரமாகுது பின்னூட்டத்தில் சந்திப்போம். வணக்கம்..ங்கோ.



Monday, January 18, 2010

நீ தமிழனா?? (படித்ததில் பிடித்தது)


ஒரு
நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டபடுகிறாய் ?
நான் கேட்டேன் - கஷ்டபடாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் !

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப்பார் ,
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!

உழைக்காமல் எப்படியப்பா இதனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி சொன்னார்,

நான் யார் தெரியுமா ? தமிழ் நாட்டு குடி மகன்,
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ருபாய் ,
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம் ,
பொழுது போக்கிற்கு வண்ண தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?

நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !

மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடபுத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்,
ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால் மாப்பிள்ளையுடம் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும் !!

வியந்து போனேன் நான்!!

என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையுட்டு, மற்றொன்று பிச்சை !!!

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சொம்பெரிகளகிறாய்,
இலவசம் நின்று போனால், உன் நிலை ?
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !

இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.

தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!

நாளைய தமிழகம் நம் கையில்
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!



இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்...
சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்...



Tuesday, January 12, 2010

அனைவருக்கும் வணக்கம்...

நான் அப்பன்....படிப்பேன்...ரசிப்பேன்....எழுத முயற்சிப்பேன். எல்லாத்திலேயும் அறைகுறை. அரசுப்பணியில் ஓய்வு. என்னசெய்வது என்று தெரியாமல் ஏற்கனவே ‘கணிணியில் மின்னஞ்சல் பார்க்க பழகியிருந்த நான் முதலில் தமிழ்மணத்தை பார்த்து படித்து ரசித்து அதன் மூலம் பதிவுலகத்தை புரிந்து வால்பையன் வகையறா...கேபிள்சங்கர் வகையறா...ஈரோடு கதிர்...செல்வநாயகி...சின்ன அம்மணி...பழமைப்பேசி என எழுத்துச்சொந்தங்கள் தெரியவந்து, நாமும் இவர்களுக்கு பங்காளி ஆகிவிட்டால் என்ன? என எண்ணம் வைத்து பிளாக்கில் தானே போய் “அப்பன்என்ற அடைமொழியை உருவாக்கிவிட்டேன். தமிழ்மணத்திலுள்ள வலையில் பதியலாம் தமிழில் எழுதலாம் என்று பார்த்து உற்சாகமாகி வலையத்துக்குள் தேடித்தேடி (நானே) தமிழ் எழுதியை கண்டுபிடித்து அதை சேமித்து வைத்து அதன்பின்பு கட், காப்பி, பேஸ்ட் புரிந்து பின்பு, முதன்முதலில் ‘பழமைப்பேசி அவர்களுக்கு பின்னூட்டம் போட்டு, அதை அவர் படித்து அடுத்த பதிவில் எனது பின்னூட்டத்தை நினைவு கூர்ந்ததில் மனம் ஆனந்த கூத்தாடி இன்னும் சிலருக்கும் பின்னூட்டம் போடுவோம் என ஆசையில் தொடாகிறபோதுதான் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு என்ற அறிவிப்பு...

இந்த வயதில் இதெல்லாம் வேண்டாத வேலை என நினைத்துக்கொண்டு, சரி போயித்தான் பார்ப்போமே! அதுசரி நம்மை உள்ளே விடுவாங்களா? என்ற ஐய்யப்பாடு. சரி என்னதான் நடக்குது என்று பார்த்துவிடுவோமே? ஏதாவது சொல்லித்தருவார்களா? என்ற ஆசையில் ஈரோடு போனேன்.

பத்து தடவை தொலைப்பேசியில் அழைத்தும் சலிக்காமல் வழிகாட்டிய பாலாசியை பாராட்டியே ஆகவேண்டும். அங்கு என் மனம், முதன்முதலில் பின்னூட்டம் மூலம் என்னைத்தெரிந்து பதிவில் எனை பதிவுசெய்த, என் நினைப்பில் பதிந்துவிட்ட ‘பழமைப்பேசிஅவர்களை தேடியது. அவர்மாதிரியே இருந்த ஒருவரிடம் ‘சார் நீங்கதானே பழமைப்பேசிஎன்றுகூட கேட்டுவிட்டேன். சிகப்பாக உயரமாக இருந்தாரா? அதனால்தான். அவர் நான் இல்லீங்க என ஒரு சிரிப்பு சிரித்தாரே பார்க்கலாம்...

மீண்டும் நினைப்பு ‘எதுக்கு இந்த வேண்டாத வேலைஎன்று வந்தது. இருந்தாலும் அந்த இளைஞர் பட்டாளத்துடன் வீரநடை போட்டு கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே நுழைந்துவிடலாம் என எண்ணி ஒரு சிலரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஓரமா உட்கார்ந்தேன். வீரமடல் ரேன்ஜிக்கு ஒரு பேட்ஜ் கொடுத்தார்கள். நான் வாசகன் எனச்சொல்லிப்பார்த்தேன். இல்லை இல்லை நீங்க ஒரு பிளாக் உருவாக்கியிருக்கிறீர்கள் நீங்க பதிவர்தான் என பட்டம் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டேன். இதென்னடா வம்பா போச்சு... இதுக்காகவாவது எதாவது எழுதனுமே என்று நினைத்தேன். அறிமுகப்படலம்...சுடச்சுட முடிந்தது.

எனக்கு தெரிந்த சிலபேர் உடுமலை பகுதியிலிருந்து வந்திருந்தனர். நாகா, உடுமலை.காம் சிதம்பரம், செந்தில்நாதன் ஆகியோர். பழமைப்பேசி அவர்களிடம் நேரில் அறிமுகப்படுத்தி... கொங்குத்தமிழில் கொஞ்சும் தோனியில் அவர் என்னை குளிப்பாட்ட..நான் ரசித்த பதிவர்களான... வானம்பாடிகள், கேபிள்சங்கர், வால்பையன், ஈரொடு கதிர், சகோதரி சுமஜ்லா, பாசத்தம்பி பாலாசி என ஏறக்குறைய எல்லாரையும் பதிவில் தெரிந்து இப்போது நேரில் பார்க்கிறேன். மிட்டாய் கடையை வேடிக்கைப் பார்த்ததைப்போல பார்த்து முடிவில் யாராவது நம்மையும் பேசச்சொல்லி மாட்டிவிடுவார்களோ? என முழித்து மீண்டும் ஒரு சிலரிடம் அவசரமாக அறிமுகப்படுத்திக்கொண்டு முதலில் சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினேன். நானும் எழுதிட்டேன்ல. நானும் பதிவர்தான். என் போட்டோவும் இருக்கு ஒரு இடத்திலே. வணக்கம்...வணக்கம்.


Saturday, January 9, 2010

தெரிந்திருக்கவேண்டிய செய்தி...


அன்புடையீர்,

தமிழ்நாடு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்கிறது. எனினும் போலியோ நோய் தாக்குதல் உள்ள பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. போலியோ நோயை அறவே அழிக்க ஆண்டுதோறும் தொண்டு நிறுவனங்களின் துணையுடன், அரசு இலவசமாக போலியோ சொட்டுமருந்து முகாம் அமைத்து பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் போலியோ சொட்டு மருந்து இரு தவணைகளில் வழங்கபட்டு வருகிறுது.

அதன் தொடர்பாக 10.1,2010 மற்றும் 07.02,2010 ஆகியநாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், பேருந்துநிலையம் , ரயில் நிலையம், மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் அமைக்கபடவுள்ளது.

எனவே மேற்கண்ட நாட்களில் 5வயதிற்குட்பட்ட உங்கள் குழந்தைக்களுக்கும் மற்றும் உங்கள் கண்ணில்படும் ஐந்து வயதிற்குட்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைக்க துணையிருங்கள்.

போலியோ என்ற கொடியநோயிலிருந்து நமது குழந்தைகளை காப்பது நமது கடமைதானே....


Thursday, January 7, 2010

தெரிந்திருக்க வேண்டிய செய்தி


என் கண்ணில் பட்ட எல்லோரும் படித்திருக்கவேண்டுமே என நான் நினைத்த செய்தி.

சென்னையில் ஒருபெற்றேர் காலாவதியான மாத்திரைகளை கொடுத்து தன் குழந்தையை கொன்றுவிட்டோமே என கூறியது, நம்மை பதற வைத்துள்ளது். ஒரு வாரப்பத்திரிக்கையின் அதிரடியால் அந்தகாலவதியான மருந்து விற்பனைக்கு வைத்திருந்த வீட்டை பொறி வைத்துபிடித்துள்ளார்கள். எனவே எதை வாங்கினாலும் காலாவதி தேதியை பார்த்துவாங்குங்க. காலம் அப்படி,கரெக்டா,,,வருகைக்கு நன்றி வணக்கம்ம்ம்ம்.

Tuesday, January 5, 2010

மனசாட்சி

சிலர் கூடி குலாவும்போது 'அறை' போட்டு அலசியது.

மனச்சாட்சியோட நடந்துங்க எனக்கூறுகிறோமே, மனச்சாட்சி என்றால் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் உள்ளது. உங்கள் மனம் நல்லபடியாக நடந்துக்க சொல்லும். என் மனம் நல்லபடியாக எண்ணாதே. ஆனாலும் மனச்சாட்சியோட நடந்துக்கிற எல்லோருக்கும் வெற்றி நிச்சியம். மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் வெற்றிபெறுவது சுலபமல்ல. மனச்சாட்சியோட நடந்து கொள்கிற சுயநலமிகள் பலர் வெற்றி பெற்று விடுகின்றனர்.

தலை சுற்றுகிறதா?? அந்த மாதிரி நேரத்தில்யோசித்தது...வேறு எப்படி இருக்கும்? மனது இருந்தால் பின்னோட்டத்தில் சாட்யை எடுங்கள்.

Monday, January 4, 2010

மனசாட்சி


சிலர் கூடி குலாவும்போது 'அறை' போட்டு அலசியது. மனச்சாட்சியோட நடந்துங்க எனக்கூறுகிறோமே, மனச்சாட்சி என்றால் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் உள்ளது. உங்கள் மனம் நல்லபடியாக நடந்துக்க சொல்லும். ஆனால் என்மனம் நல்லபடியாக எண்ணாதே. ஆனாலும் மனச்சாட்சியோட நடந்துக்கிற எல்லோருக்கும் வெற்றி நிச்சியம். மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்தால்வெற்றி பெறுவது சுலபமல்ல. மனச்சாட்சியோட நடந்து கொள்கிற சுயநலமிகள் பலர் வெற்றி பெற்று விடுகின்றனர்.

தலை சுற்றுகிறதா? அந்த மாதிரி நேரத்தில்யோசித்தது...வேறு எப்படி இருக்கும். மனது இருந்தால் பின்னோட்டத்தில் சாட்டயை எடுங்கள்.


Friday, January 1, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்....









புறப்பட்டுவிட்ட புத்தாண்டுக்கும்....
தொடர்கின்ற பொங்கலுக்கும்...
வாழ்த்துங்க, வாழ்த்துங்கோ...