Monday, December 20, 2010

சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க..

வணக்கம். மாதத்திற்கு ஒண்ணாவது பதிவு கொடுக்கவில்லையென்றால் நம்ம சொந்தங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்து எதையாவது எழுதி விடுவது என முடிவுக்கு வந்துட்டேன்.

தினமும் அதிகாலையில் எழுந்து நெட்டை கனெக்சன் கொடுத்துவிட்டு சுமார் 2கிமீ நடந்திட்டு வருவது.. வந்து மெயில் பார்ப்பது.. பார்த்து.. நம்ம பிளாக்கில் யாராவது புதிய வரவுகள் வழி தெரியாமல் வந்துவிட்டார்களா.. வந்திருந்தா அவுங்க பக்கம் போயி பார்த்து படித்து கருத்தை பதிவு செய்துவிட்டு வருவது. இப்படியே காலம் தள்ளிவிடலாம் என எண்ணி கொண்டு இருந்த வேளையில்...... தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு...

ஈரோட்டுக்கு இருபத்தாறாம் தேதி போகணும். மெனுவேற போட்டு நாக்கில் எச்சை ஊற வைத்துள்ளார்கள். பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் ஈரோடு போரேன் அப்படின்னு சொன்னா என்ன வேலயா போறீங்க...அப்படின்னு ஒருத்தரும் கேட்பத்தில்லை. நானே.. நம்ம   உலகம் முதல் உள்ளுர் வரையுள்ள நம்ம சொந்தங்களைப்பற்றி சொல்ல  மிரள ஆரம்பித்து விட்டார்கள். நானும் இருபத்தாறாம் தேதி வரை பொறுங்க..அப்புறம் இருக்கு.. மனசுக்குள் போட்டோ ஆதாரத்துடன் வருகிறேன் அப்படீன்னு நினைத்து  கொண்டு இருக்கிறேன்.
 

 

 
சொந்தங்களே ஈரோட்டுக்கு வாங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்




9 comments:

மாணவன் said...

சந்திப்பு நிகழ்வுகள் இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்....

சிநேகிதன் அக்பர் said...

ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வர முயற்சி செய்திருப்பேன்.

பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

Unknown said...

அண்ணா காத்தால நேரத்திலியே வந்துருங்க நேரில் சந்திப்போம்

Aathira mullai said...

மிகவும் வருத்தமாக உள்ளது. முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே... என்னதான் நடக்கிறது எனக் காண ஆவல்..

இப்படி வலைப்பதிவர்கள் கூடும் மாநாட்டைக் காண ஆவல் இருந்தும் வர முடியாத சூழல்.

சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.ஏன் என்னைப் பயம் காட்டினபடி நீங்க.உங்க மகள்போல நான் அப்பா.வழி நடத்துங்கள்.பாதம் பணிந்த வணக்கங்கள் !

சென்னை பித்தன் said...

ஏனுங்க!புது வருசம் பெறந்தாச்சுங்க!ஈரோட்டுக்குப் போனீங்களா?ஒண்ணுமே எழுதலீங்களே!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

சிவகுமாரன் said...

தாராபுரத்தாரே
பதிவில் ஒன்றும்
தாரா புரத்தாரே.
தாராது போனாலும்
வாராது போகாதீர்கள்
என் வலைக்கு.