Tuesday, April 13, 2010

வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?



“வணக்கம்ங்க..வாங்க .அடையாளம் தெரியுதுங்களா?”

“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது.. சட்டுன்னு ஞாபகம் வர மாட்டீங்கிது.”

“சார் நான் தாரா... ”

“ஓ..இப்ப ஞாபகம் வந்திருச்சு..ரொம்ப சந்தோசம்..எப்ப வந்தீங்க? காப்பி சாப்பிடுறீங்களா? ”

“இப்பதாங்க... அய்யோ காப்பி வேண்டாங்க.. கொடுமையான வெயில் மோரு கீறு இருந்தா கொடுங்க...

“கீறு இல்லை..கூல்டீரிங்ஸ் ஏதாவது சாப்பிடரீங்களா?

“எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..அது மட்டும் வேண்டாங்க. சில்லுன்னு ஓரு டம்ளர் தண்ணி கொடுங்க..

“எது வேணும்னாலும் கேளுங்க தண்ணி மட்டும் கேட்காதீங்க.. தண்ணீர் சிக்கனம் பற்றிய பதிவுகளை படிக்கரீங்களா?

“.....ரொம்ப செளரியமாக போச்சு.. நீங்களே வந்துட்டீங்க விசயத்திற்கு....

“சரி..சரி..ஈரோடு எப்ப வந்தீங்க?.. உங்க ஊரு வெயில் எப்படி?

“என்ன இருந்தாலும் எங்க ஊரைப்போல் வருமா?....வெயில் பொறுக்க முடியாமத்தான் தண்ணீர், மரம் என பதிவுகள் போட வேண்டியதாகிப் போச்சு.

என் உறவினர் ஒருவர் கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டு கொல்லம் பாளையத்தில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்தேன். நண்பகல் நேரம்.... வீராசாமி அண்ணன் தயவுல மூன்று மணிக்குத்தான் கரண்டு வருமாம். வெயிலின் தாக்கம் தாங்க முடியாம வீட்டுக்கு வெளியே சைடு ரோட்டில் புங்க மரத்தடியில் நிக்க வேண்டியதாப் போச்சு. அப்போது நண்பகல் 1.30. தீடிரென எனது காலுக்கு கீழே சொய்ய்ய்ய்ய்.....என்ற சத்தத்துடன் தண்ணீர் பீரிட்டு கிளம்பி காவேரிக்கு போட்டியா ஒடி சாக்கடையில் கலக்குது.

“என்னடா அது ...பெரியார் பிறந்த மண்ணுலை அதிசியம்...வால்பையன் தம்பிக்கு தெரிந்தால் என்ன ஆகும்” என யோசித்து கொண்டே அருகில் இருந்த என் உறவினரிடம் கேட்டேன்... “என்னுங்க இது ?” என்று..

“வேறொன்றுமில்லைங்க..இப்பத்தான் (மா)நகராட்சியிலருந்து தண்ணீர் முறை வைத்து விட்டிருக்காங்க. ஏதோ பைப் லைன் உடைந்துவிட்டது போல உள்ளது. அதுதான் தண்ணீர் வருது..” என கூறினார்.

சமீபத்தில் ஈரோடு பதிவர்களின் பதிவுகளை படித்த நமக்கு கண்ணீர் இல்ல வருது....

உடனே நான் ஆராயிச்சியில் இறங்கினேன். “ஈராட்டில் யார் ஆட்சி? எத்தனை நாளா இப்படி தண்ணீர் வீணாகுது? இதை ஏன் சமூக அக்கரையுள்ள யாரும் உரிய அதிகார அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வில்லை?” என எனக்குள்ளேயே நினைத்து கொண்டு ....

“இந்த இடத்திற்கு என்ன பேறுங்க?” எனக் கேட்டேன்.

“காசி பாளையம் , கொல்லம் பாளையம்..” எனக்கூறினார்..

பைபாஸ்லிருந்து நேரா வந்தா முதல் லெப்ட் கட்... சில அடிதூரத்தில் பெரிய காட்டுத்தோட்டம் என்ற பெயர் பலகை ரைட் சைடில் உள்ளது. ஈரோட்டில் தண்ணீர் வீணாவதை பார்த்த போது நம்ம ‘கதிர்’கள் உள்ள ஊரில்.....

“போனை போடலாமா” என யோசித்தேன்.. நேற்று மரம் வளர்க்கும் மாமனிதர்களை அறிமுகப்படுத்திய நிழலில் இளைப்பாறும் அவரை ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இரவு முழுவதும் வீரிட்டு கிளம்பி வெளியே வந்து சாக்கடையில் கலக்கும் தண்ணீரின் ஞாபகம். காலையில் முதல் பார்வையில் கண்ணில் பட்டதும் தமிழ்மணத்தில் வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை கோடியில் இருவர்.

“என்ன ஆனாலும் சரி அவரு இ..மெயிலுக்கு நம்ம கருத்தை அனுப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்த பின்... தீடிரென ஒரு யோசனை...நாமத்தான் பதிவு போட்டு பத்து நாளாச்சே.. இதையே நீட்டி முழங்கி கணக்கில் ஒண்ணு சேர்திட்ட மாதிரியும் ஆச்சு.... உடனே ஈரோட்டுக்கு கதிர் அவர்களை பார்க்க புறப்பட்டு விட்டேன். ஈரோடு வாழ் பதிவர்கள் தெரிந்து அக்கரையுள்ள ஒருவர் என்னைப் போல் அறைகுறையாக இல்லாமல் நிறைகுடமாக மாற ஆசையுடன்.........வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?


41 comments:

vasu balaji said...

/நாமத்தான் பதிவு போட்டு பத்து நாளாச்சே.. இதையே நீட்டி முழங்கி கணக்கில் ஒண்ணு சேர்திட்ட மாதிரியும் ஆச்சு.../

இந்த அண்ணன் அலும்பு தாளல சாமி. பாலாசிப்பய எப்புடி கெடுத்து வச்சிருக்கான்:))

Ahamed irshad said...

"வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?"


இங்க உள்ள சூட்டுக்கு கூல் தாங்க வேணும்.

கட்டுரை அருமை...

ஈரோடு கதிர் said...

அய்யோ சாமி

நான் இனிமே எழுதவேயில்லையப்பா

என்ன வுட்றுங்ண்ணா!!!

மவனே பாலாசி.. நீ மட்டும் கையில கிடைச்சீனா... அம்புட்டுத்தான் நீ...

ஈரோடு கதிர் said...

//சொய்ய்ய்ய்ய்.....என்ற சத்தத்துடன் தண்ணீர் பீரிட்டு கிளம்பி காவேரிக்கு போட்டியா ஒடி சாக்கடையில் கலக்குது.//

அண்ணே... இதெல்லாம் இன்னும் ஒன்னு ரெண்டு வாரத்துக்குத்தான்...

காவிரில வர்ற தண்ணிய கோணவாய்க்கா பிரிவுல திருப்பூருக்கு கடத்திட்டு போயிடுறாங்க...

மிஞ்சிபோய்...
கொஞ்சம் தேங்கிக்கிடக்கிற தண்ணி வத்தற வரைக்கும் இப்படிதான் தண்ணியில ஆடுவோம்... அப்புறம் நசியனூர் பக்கமிருந்து லாரில வாங்கிக்கிவோம்..

அதுவும் நின்னுப்போச்சுன்னாத்தான்... அப்புறம் உங்க இடுகைய திரும்ப படிச்சு... புத்தியில போட்டுக்குவோம்

Unknown said...

தாரபுரத்தண்ணே வர வர உங்க எழுத்து மெருகேரிட்டே போகுதண்ணே. ஆமா ஈரோட்டுக்கு வந்துட்டு எங்களையெல்லாம் பாக்காம போயிட்டா
எப்படி. கூப்பிட்டிருந்தீங்கண்ணா கூலா பார்லி டீ வாங்கி குடுத்திருப்பமல்லோ.

அன்புடன்
சந்துரு

Unknown said...

\\மவனே பாலாசி.. நீ மட்டும் கையில கிடைச்சீனா... அம்புட்டுத்தான் நீ...//

கதிரு பாலாசிய வெகு ஆளுக தேடிக்கிட்டிருக்கிங்க போல.

கண்ணகி said...

ஓய்வு காலத்த பயனுள்ள பார்வையோட பய்னுள்ள வகையில் செலவு பண்றிங்க...நடத்துங்க..நடத்துங்க..

சிநேகிதன் அக்பர் said...

என்னத்த சொல்ல.

ஏதாவது செய்யனும் சார்.

அன்புடன் அருணா said...

ரைட்டு!

VELU.G said...

நல்லாயிருக்குங்க கடைசியா என்னதான் சாப்பிட்டீங்க

Chitra said...

பெரியவர்கள் பெரியவர்கள்தான்....... !!! கலக்கல் பதிவு. கதிர் சாருக்கும் பாராட்டுக்கள்.

அரசூரான் said...

பதிவு சூடு, சொன்ன விதம் கூலு. நல்ல வேளை குழாய் உடைஞ்சி தண்ணி வருதே... பல இடங்களில் விச வாயுல்ல வருதாம்.

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌திவு சார்...க‌டைசி வ‌ரை என்னா குடிச்சீங்க‌ என்ப‌தை சொல்ல‌வே இல்லையே..

தாராபுரத்தான் said...

அலும்பே உங்களை பார்த்த பின்பு தான் எனக்கும் பாலாசிக்கும்......வானம்பாடிகள் தலைவர் அவர்களே.

தாராபுரத்தான் said...

இக்கரைக்கு அக்கரை...நன்றிங்க தம்பி.

தாராபுரத்தான் said...

இதற்கு முன்பு எத்தனை முறை ஈரோடு வந்தாலும் நினைவுக்கு வருவது ஈரோட்டு அடையாளம் காளைமாட்டுச்சின்னம் தான் ...ஆனால் இப்போது ஈரோட்டை நினைத்தாலே நீங்கள் மற்றும் உங்கள் அன் கோ தானே ஞாபகம் வருகிறீர்கள். மன்னிக்கவும் நேரில் சந்திக்காமல் வந்தமைக்கு..

தாராபுரத்தான் said...

தாமோதர் சந்தரு அண்ணா....கதிர் அவர்களுக்கு போட்ட பதில் தான் உங்களுக்கும்...மன்னிக்கவும்.

தாராபுரத்தான் said...

உங்களையெல்லாம் கட்டி கொடுத்திட்டு கணிப்பொறி இருக்கங்காட்டி தப்புச்சோம் தாயி....கண்ணகி

தாராபுரத்தான் said...

என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம் அக்பர்.

தாராபுரத்தான் said...

ரைட்டு!

அன்புடன் அருணா சொன்னா கரைக்கிட்.

தாராபுரத்தான் said...

கரும்புச்சாறு குடித்துவிட்டு வந்தேன் வேலு.

தாராபுரத்தான் said...

வெயிலுக்கு உங்க பாராட்டெல்லாம் பத்தாது கண்ணு சித்ரா.

தாராபுரத்தான் said...

நன்றிங்க அரசூரான்.

தாராபுரத்தான் said...

கடையில் கரும்புச்சாறு குடித்து போட்டு வந்தேன்ங்க தம்பி நாடோடி.

பழமைபேசி said...

அண்ணா, வணக்கம்!

Nathanjagk said...

கதிர் இடுகை அறிமுகத்துக்கு​ரொம்ப நன்றிங்க!
கோடையை முந்திக்​கொண்டு தண்ணீர் பஞ்சம் வந்துவிடுகிறது. இப்ப கூடுதலா கரண்டு கட்டும் வேற.

தண்ணீர் எல்லாருக்கும் ​பொதுவா என்னன்னு ​தெரியலீங்க.. ஆனா பஞ்சம் ​பொதுதான் போல.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா... தண்ணிர், வெயில், மரங்கள் எல்லாவற்றையும் ஒரு கலவையாய்க் கலக்கீட்டீங்க... ஐயா.. பெரியவா பேரப் போடும் போது கவனமா இருங்க...

பிரேமா மகள் said...

ஹை.. தாத்தா... குட்டும் ஷெட்டும் சூப்பர்... ஈரோட்டில தண்ணி கஷ்டமா? ஆகா.. சிங்கார சென்னையில் வெயில் தாங்காம ஊருக்கு கிளம்பி வரலாம்ன்னு பார்த்தா... இப்படி ஆகிடுச்சே.... சரி நாங்க வழக்கம் போல கூவத்திலேயே குளிச்சிக்கிறோம்..

கண்ணகி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...அப்பா..

அகல்விளக்கு said...

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

VELU.G said...

// கரும்புச்சாறு குடித்துவிட்டு வந்தேன் வேலு.
//

அடுத்த முறை ஈரோடு வந்தா சொல்லுங்க நானுங்கலந்துக்கறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//“எது வேணும்னாலும் கேளுங்க தண்ணி மட்டும் கேட்காதீங்க.. தண்ணீர் சிக்கனம் பற்றிய பதிவுகளை படிக்கரீங்களா?”//

நல்லா சொன்னிங்க அய்யா. என்னைய தேதிக்கி வேண்டிய பதிவு. அதோட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

வணக்கம் வணக்கமுங்க..வேளை அதிகமோ..பின்னி எடுக்கிறாங்களோ?

தாராபுரத்தான் said...

வணக்கம் வணக்கமுங்க..வேளை அதிகமோ..பின்னி எடுக்கிறாங்களோ?

தாராபுரத்தான் said...

வாங்க ஐகநாதன்...நலமா?

தாராபுரத்தான் said...

நன்றி... சரி..தப்பு வராம பார்த்துக்கிறேன் செந்தில்.

தாராபுரத்தான் said...

ஈரோட்டில் தண்ணிக்கு ஒண்ணும் கஸ்டமில்லை...வா சுபி்.

எல் கே said...

arumayana pathivu. erodeil mattuma alla salemla kooda niraya idathula ippadipothu

ஜெய்லானி said...

நம்ம ஊரில தாங்க இப்படி. இதே இங்க (ஷார்ஜா ) ஒரு போன் பண்ணினா போதும் அடுத்த இருவதாவது நிமிஷம் ஆட்கள் வந்து சரிபண்ணிடுவாங்க.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவுங்க. காசிபாளையம் கொல்லம்பாளையத்தில் இருந்து நம்ம ஊருக்கு பஸ் ஏறனுமுன்ன காளை மாட்டுக்த்தான் வரனும். அப்படியே ஒரு சொம்பு கம்மங்க கூழ் குடித்து ஒரு டம்ளர் மோரையும் குடிச்சு பஸ் ஏறுனா வெயில் தெரியாது. ஒரு குட்டித்தூக்கம் போட்டா நம்ம ஊரு வந்துரும். இல்லை சுகமா ஒரு அரைத்தூக்கத்தில் கண்ணை மூடி யோசிச்சா இப்படி ஒரு பதிவு வந்துரும்.
நல்ல பதிவுங்க அய்யா.

ஹேமா said...

ஐயா...வணக்கம்.உங்கள் பதிவுகள் வாசித்து ஒரு நிறைவு.அப்பா கதை சொல்வதுபோல ஒரு உணர்வு.
சந்தோஷமாயிருக்கு.நன்றி.
தொடருங்கள் வாசிக்க ஆவல்.