“வணக்கம்ங்க..வாங்க .அடையாளம் தெரியுதுங்களா?”
“எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது.. சட்டுன்னு ஞாபகம் வர மாட்டீங்கிது.”
“சார் நான் தாரா... ”
“ஓ..இப்ப ஞாபகம் வந்திருச்சு..ரொம்ப சந்தோசம்..எப்ப வந்தீங்க? காப்பி சாப்பிடுறீங்களா? ”
“இப்பதாங்க... அய்யோ காப்பி வேண்டாங்க.. கொடுமையான வெயில் மோரு கீறு இருந்தா கொடுங்க...”
“கீறு இல்லை..கூல்டீரிங்ஸ் ஏதாவது சாப்பிடரீங்களா? ”
“எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..அது மட்டும் வேண்டாங்க. சில்லுன்னு ஓரு டம்ளர் தண்ணி கொடுங்க..”
“எது வேணும்னாலும் கேளுங்க தண்ணி மட்டும் கேட்காதீங்க.. தண்ணீர் சிக்கனம் பற்றிய பதிவுகளை படிக்கரீங்களா?”
“.....ரொம்ப செளரியமாக போச்சு.. நீங்களே வந்துட்டீங்க விசயத்திற்கு....”
“சரி..சரி..ஈரோடு எப்ப வந்தீங்க?.. உங்க ஊரு வெயில் எப்படி? ”
“என்ன இருந்தாலும் எங்க ஊரைப்போல் வருமா?....வெயில் பொறுக்க முடியாமத்தான் தண்ணீர், மரம் என பதிவுகள் போட வேண்டியதாகிப் போச்சு. ”
என் உறவினர் ஒருவர் கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டு கொல்லம் பாளையத்தில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்தேன். நண்பகல் நேரம்.... வீராசாமி அண்ணன் தயவுல மூன்று மணிக்குத்தான் கரண்டு வருமாம். வெயிலின் தாக்கம் தாங்க முடியாம வீட்டுக்கு வெளியே சைடு ரோட்டில் புங்க மரத்தடியில் நிக்க வேண்டியதாப் போச்சு. அப்போது நண்பகல் 1.30. தீடிரென எனது காலுக்கு கீழே சொய்ய்ய்ய்ய்.....என்ற சத்தத்துடன் தண்ணீர் பீரிட்டு கிளம்பி காவேரிக்கு போட்டியா ஒடி சாக்கடையில் கலக்குது.
“என்னடா அது ...பெரியார் பிறந்த மண்ணுலை அதிசியம்...வால்பையன் தம்பிக்கு தெரிந்தால் என்ன ஆகும்” என யோசித்து கொண்டே அருகில் இருந்த என் உறவினரிடம் கேட்டேன்... “என்னுங்க இது ?” என்று..
“வேறொன்றுமில்லைங்க..இப்பத்தான் (மா)நகராட்சியிலருந்து தண்ணீர் முறை வைத்து விட்டிருக்காங்க. ஏதோ பைப் லைன் உடைந்துவிட்டது போல உள்ளது. அதுதான் தண்ணீர் வருது..” என கூறினார்.
சமீபத்தில் ஈரோடு பதிவர்களின் பதிவுகளை படித்த நமக்கு கண்ணீர் இல்ல வருது....
உடனே நான் ஆராயிச்சியில் இறங்கினேன். “ஈராட்டில் யார் ஆட்சி? எத்தனை நாளா இப்படி தண்ணீர் வீணாகுது? இதை ஏன் சமூக அக்கரையுள்ள யாரும் உரிய அதிகார அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வில்லை?” என எனக்குள்ளேயே நினைத்து கொண்டு ....
“இந்த இடத்திற்கு என்ன பேறுங்க?” எனக் கேட்டேன்.
“காசி பாளையம் , கொல்லம் பாளையம்..” எனக்கூறினார்..
பைபாஸ்லிருந்து நேரா வந்தா முதல் லெப்ட் கட்... சில அடிதூரத்தில் பெரிய காட்டுத்தோட்டம் என்ற பெயர் பலகை ரைட் சைடில் உள்ளது. ஈரோட்டில் தண்ணீர் வீணாவதை பார்த்த போது நம்ம ‘கதிர்’கள் உள்ள ஊரில்.....
“போனை போடலாமா” என யோசித்தேன்.. நேற்று மரம் வளர்க்கும் மாமனிதர்களை அறிமுகப்படுத்திய நிழலில் இளைப்பாறும் அவரை ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
இரவு முழுவதும் வீரிட்டு கிளம்பி வெளியே வந்து சாக்கடையில் கலக்கும் தண்ணீரின் ஞாபகம். காலையில் முதல் பார்வையில் கண்ணில் பட்டதும் தமிழ்மணத்தில் வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை கோடியில் இருவர்.
“என்ன ஆனாலும் சரி அவரு இ..மெயிலுக்கு நம்ம கருத்தை அனுப்பிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்த பின்... தீடிரென ஒரு யோசனை...நாமத்தான் பதிவு போட்டு பத்து நாளாச்சே.. இதையே நீட்டி முழங்கி கணக்கில் ஒண்ணு சேர்திட்ட மாதிரியும் ஆச்சு.... உடனே ஈரோட்டுக்கு கதிர் அவர்களை பார்க்க புறப்பட்டு விட்டேன். ஈரோடு வாழ் பதிவர்கள் தெரிந்து அக்கரையுள்ள ஒருவர் என்னைப் போல் அறைகுறையாக இல்லாமல் நிறைகுடமாக மாற ஆசையுடன்.........வாங்க.. என்ன சாப்பிடரீங்க....சூடா..கூலா?
