அன்பிற்குரியவர்களே..வணக்கம்,
கிராமங்களில் இன்னும் பலர் பல் துலக்க பல்குச்சித்தான் பயன் படுத்தி வருகிறார்கள். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி... வேப்பங்குச்சி, வேலங்குச்சி போன்ற குச்சிகளை மரத்திலிருந்து ஒடித்து பயன்படுத்துவார்கள். நானும் ஒரு சில சமயங்களில் வேப்பங்குச்சியை பயன்படுத்துவேன். அதன் மிதமான கசப்பும், வேலங்குச்சியின் துவர்ப்பும் சுகமான அனுபவம்தான். நண்பரின் பதிவை படித்தவுடன் இனிமேல் பல் துலக்க கூட பல் குச்சியை ஒடிக்க மாட்டேன் என என் கருத்தை பதிவு செய்தேன்.
மீண்டும் யோசித்தேன்..சென்ற வாரம் உறவினர் ஒருவர் கட்டும் புதுவீட்டுக்கு மரம் வாங்க என்னையும் கூட்டிப்போனார். எல்லா மரக்கடையும் ஏறி இறங்கியும் அவர் விருப்பப்பட்ட படி மரம் கிடைக்கவில்லை. மரக்கடையில் அவர் சொன்னார்.. என்ன விலையானாலும் பரவாயில்லை.. நல்ல விளைந்த மரமா இருக்கு வேண்டும். இவ்வளவு மரம் வேண்டும்.. என மர வியாபாரியிடம் ஆசையை சொல்லிவிட்டார். இனி என்ன நடக்க போகிறது..மரவியாபாரி தான் மரம் வாங்கும் இடத்தில் தன் வியாபார திறமையை காட்டுவார். அவருக்கு மரம் தருபவர்கள் தன் கை வரிசையை இயற்கையிடம் காட்டத்தான் போகிறார்கள்.. நமது தேவைகளுக்கு எந்த எந்த மரங்கள் உயிர் விடப் போகிறதோ.. ??
நமக்கு வேண்டியது நம்ம வீட்டுக்கு தேக்கு மரத்திலே கதவு...ஐன்னல்கள்...மரப்பீரோ..
(நன்றி பனித்துளி சங்கர்.)
26 comments:
உங்கள் சமூக அக்கறையை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.
ரொம்ப நல்லா பதிஞ்சு இருக்கீங்க
இந்த எண்ணம் எல்லாருக்கும் வரணும்
இப்பத்தான் கான்கிரீட்டு கூரை, இரும்பு சன்னல்னு ஆகிப் போச்சுங்களே. அத்தியாவசியமா நடுத்தரக் குடும்பத்துக் காரங்க மரம் பயன்படுத்துராங்க. ஆடம்பரத்துக்கு சுவத்தை மரைச்சு மரப்பட்டி, முக்கியமா மரத்தை அறுத்து தூள் பண்ணி பலகை, சோஃபா, கட்டில்னு விரயம் பண்ணாம இருக்கலாம். ஒரு மரம் வெட்டினா 2 மரம் நடணும்னு சட்டம் வரணும்.நல்ல இடுகையண்ணே
"மர" த்து போன உள்ளங்கள், கொஞ்சம் சிந்தித்தால் சமூக அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். நல்ல கருத்துக்கள் உள்ள இடுகை. நன்றி.
முயற்சி பண்ணுவோம்.. நல்ல அவசியமான பதிவு..
ஊருக்கு வந்தால் பல் குச்சியால் விளக்குவதை ஒரு கடமையாகவும், கருவேலங்குச்சிகளை வெட்டி கட்டாய் இங்கு கொண்டு வருவதை வழக்கமாய் கொண்டிருக்கும் நான் நிறுத்தப்போகிறேன் இந்த இடுகையைப் படித்தபின். அருமை அய்யா! விழிப்புணர்வூட்டும் பதிவு!
வானம்பாடிகள் அய்யா சொல்வது போல் ஒன்று வெட்ட இரண்டு நடுதல் கட்டாயப்படுத்துதல் வேண்டும்.
பிரபாகர்...
ஐயா நல்லதொரு பதிவு சமூக அக்கறையோடு.என்றாலும் நாகரீக வளர்சியால் நாங்களும்தானே அதே சகதிக்குள் தள்ளப்படுகிறோம்.சில விஷயங்கள் விரும்பாவிட்டாலும் ஒட்டிக்கொண்டுவிட்டதே !
முயற்சி செய்தாலும் முடியாமலிருக்கிருக்கிறதே !
அருமையான பகிர்வு சார்.
நல்ல கருத்துள்ள பகிர்வு சார்....
பதிவை பாராட்டிவிட்டு சென்றுள்ள //அக்பர்// பத்மா//வானம்பாடிகள்// சித்ரா//ெஐயலானி//பிரபாகர்//கேமா// பா.ரா மற்றும் கமலேஷ் அனைவருக்கும் நன்றிகள்..பாராட்டியதோடு மட்டும் போதாதுங்க..மர ஆசையை விட முயற்ச்சி...விடா முயற்ச்சி செய்யுங்கள்.
ஐயா. வணக்கம். நல்ல எண்ணம்.
வீடுகளைக் கட்ட மரங்களின் தேவைகள் வளரத்தான் செய்யும். அதற்கு நாம் செய்ய வேண்டியது மரங்களை வளர்ப்பதே ஆகும். வேண்டுமென்றால் வீட்டின் உள் வேலைப்பாடுகளுக்கு ப்ளைவுட்களைப் பயன்படுத்தலாம்.
அவசியமான பதிவு.. வாழ்த்துக்கள் sir.
தேவையான பதிவு.
நன்றாகச் சொன்னீர்கள்..
படங்கள் இடுகையின் கருத்தை மேலும் எடுத்தியம்புவனவாகவுள்ளன..
//நல்ல எண்ணம்.//நன்றிங்க செந்தில்.
//அவசியமான பதிவு//மகிழ்ச்சி ஆன்ந்தி.
//தேவையான பதிவு//ெஐயந்திக்கும் நன்றி.
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்வை ஏற்படுத்துகிறதுங்கோ..நன்றி.
அக்கறையான பதிவு... நானும் இந்த செய்தியை பரப்ப முயல்கிறேன்...
சமூக அக்கறையுள்ள பதிவு
\\வானம்பாடிகள் said...
ஒரு மரம் வெட்டினா 2 மரம் நடணும்னு சட்டம் வரணும்.நல்ல இடுகை\\
:-))
சமூக அக்கறையுள்ள பதிவு
\\வானம்பாடிகள் said...
ஒரு மரம் வெட்டினா 2 மரம் நடணும்னு சட்டம் வரணும்.நல்ல இடுகை\\
:-))
தீர்வு... நிறைய மரங்களை வளர்க்க வேண்டும்.. ஆடம்பர தேவைகளைத் தவிர்த்து, தேவைக்கேற்ப உபயோகித்து வாழ வேண்டும்...
உங்கள் பகிர்வு மிக முக்கியமானது...
நானும் இது தொடர்பாக எழுத நினைக்கிறேன்.. தொடர்பதிவு மிக விரைவில்.. நன்றி..
அய்யா,
நீங்க சொல்றதெல்லாம் சாமி சத்தியமா உண்மைதானுங்க. ஆனால், அதற்கான பரிகாரம்தான் சரியாய்ப் படலை. என் கருத்து தப்பாய் பட்டால் மறந்து மன்னிச்சுடுங்க. சரியா? மரம் மேலுள்ள ஆசை எந்த மனிதனையும் விடாது. நம் கனவுகளில் கூட மறக்க முடியாத 'வீர்ப்பனே' அதற்கு சாட்சி. ஆனால், அரசாங்கம் வழி முறைகள் வகுத்து தரலாம், பிறந்த நாள் முதற்கொண்டு வீடு கட்டும் நிகழ்ச்சி வரை கட்டாயம் மரம் நட வேண்டிய சட்டதிட்டங்களை வகுக்கலாம். ஆனால், நடந்து முடிந்த கோபன்ஹேகன் மாநாட்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமர் வெளிநடப்பு செய்து காட்டியபின் இந்த ஆசைகள் எல்லாம் மரத்தை விட சீக்கிரமாக மக்கிப் போய்விட்டது. ஹ்ம்ம்...இந்த வருட கோவையின் வெயில் அளவே இதனை வெகு எளிதாக நம் கண்முன் நிறுத்துகின்றது. என்ன செய்ய? நம்முடைய பிள்ளைகளுக்குதான் அதன் அத்தியாவசியத்தை செயல்முறையில் விளக்க வேண்டும். அடுத்த சந்ததியாவது வேர்களுக்கு வழி விட கற்றுத்தர வேண்டும். என்னமோ தோன்றியதை சொல்லிவிட்டேன்.
ஆனால் இந்த வயதிலும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சியெடுத்ததற்கு நன்றிங்க அய்யா.
Dear Sir, I am comming to Dharapuram on 29.05.10 and 30.05.10. In these days please call me my phone number 9894561034. My house is opposit to St.Allosysiyas girls school and i will be always at Ramakrishna Xerox shop at taluk office road. Pls call me i will come and contact you. thanking you.
Post a Comment