Tuesday, January 12, 2010

அனைவருக்கும் வணக்கம்...

நான் அப்பன்....படிப்பேன்...ரசிப்பேன்....எழுத முயற்சிப்பேன். எல்லாத்திலேயும் அறைகுறை. அரசுப்பணியில் ஓய்வு. என்னசெய்வது என்று தெரியாமல் ஏற்கனவே ‘கணிணியில் மின்னஞ்சல் பார்க்க பழகியிருந்த நான் முதலில் தமிழ்மணத்தை பார்த்து படித்து ரசித்து அதன் மூலம் பதிவுலகத்தை புரிந்து வால்பையன் வகையறா...கேபிள்சங்கர் வகையறா...ஈரோடு கதிர்...செல்வநாயகி...சின்ன அம்மணி...பழமைப்பேசி என எழுத்துச்சொந்தங்கள் தெரியவந்து, நாமும் இவர்களுக்கு பங்காளி ஆகிவிட்டால் என்ன? என எண்ணம் வைத்து பிளாக்கில் தானே போய் “அப்பன்என்ற அடைமொழியை உருவாக்கிவிட்டேன். தமிழ்மணத்திலுள்ள வலையில் பதியலாம் தமிழில் எழுதலாம் என்று பார்த்து உற்சாகமாகி வலையத்துக்குள் தேடித்தேடி (நானே) தமிழ் எழுதியை கண்டுபிடித்து அதை சேமித்து வைத்து அதன்பின்பு கட், காப்பி, பேஸ்ட் புரிந்து பின்பு, முதன்முதலில் ‘பழமைப்பேசி அவர்களுக்கு பின்னூட்டம் போட்டு, அதை அவர் படித்து அடுத்த பதிவில் எனது பின்னூட்டத்தை நினைவு கூர்ந்ததில் மனம் ஆனந்த கூத்தாடி இன்னும் சிலருக்கும் பின்னூட்டம் போடுவோம் என ஆசையில் தொடாகிறபோதுதான் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு என்ற அறிவிப்பு...

இந்த வயதில் இதெல்லாம் வேண்டாத வேலை என நினைத்துக்கொண்டு, சரி போயித்தான் பார்ப்போமே! அதுசரி நம்மை உள்ளே விடுவாங்களா? என்ற ஐய்யப்பாடு. சரி என்னதான் நடக்குது என்று பார்த்துவிடுவோமே? ஏதாவது சொல்லித்தருவார்களா? என்ற ஆசையில் ஈரோடு போனேன்.

பத்து தடவை தொலைப்பேசியில் அழைத்தும் சலிக்காமல் வழிகாட்டிய பாலாசியை பாராட்டியே ஆகவேண்டும். அங்கு என் மனம், முதன்முதலில் பின்னூட்டம் மூலம் என்னைத்தெரிந்து பதிவில் எனை பதிவுசெய்த, என் நினைப்பில் பதிந்துவிட்ட ‘பழமைப்பேசிஅவர்களை தேடியது. அவர்மாதிரியே இருந்த ஒருவரிடம் ‘சார் நீங்கதானே பழமைப்பேசிஎன்றுகூட கேட்டுவிட்டேன். சிகப்பாக உயரமாக இருந்தாரா? அதனால்தான். அவர் நான் இல்லீங்க என ஒரு சிரிப்பு சிரித்தாரே பார்க்கலாம்...

மீண்டும் நினைப்பு ‘எதுக்கு இந்த வேண்டாத வேலைஎன்று வந்தது. இருந்தாலும் அந்த இளைஞர் பட்டாளத்துடன் வீரநடை போட்டு கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே நுழைந்துவிடலாம் என எண்ணி ஒரு சிலரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஓரமா உட்கார்ந்தேன். வீரமடல் ரேன்ஜிக்கு ஒரு பேட்ஜ் கொடுத்தார்கள். நான் வாசகன் எனச்சொல்லிப்பார்த்தேன். இல்லை இல்லை நீங்க ஒரு பிளாக் உருவாக்கியிருக்கிறீர்கள் நீங்க பதிவர்தான் என பட்டம் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டேன். இதென்னடா வம்பா போச்சு... இதுக்காகவாவது எதாவது எழுதனுமே என்று நினைத்தேன். அறிமுகப்படலம்...சுடச்சுட முடிந்தது.

எனக்கு தெரிந்த சிலபேர் உடுமலை பகுதியிலிருந்து வந்திருந்தனர். நாகா, உடுமலை.காம் சிதம்பரம், செந்தில்நாதன் ஆகியோர். பழமைப்பேசி அவர்களிடம் நேரில் அறிமுகப்படுத்தி... கொங்குத்தமிழில் கொஞ்சும் தோனியில் அவர் என்னை குளிப்பாட்ட..நான் ரசித்த பதிவர்களான... வானம்பாடிகள், கேபிள்சங்கர், வால்பையன், ஈரொடு கதிர், சகோதரி சுமஜ்லா, பாசத்தம்பி பாலாசி என ஏறக்குறைய எல்லாரையும் பதிவில் தெரிந்து இப்போது நேரில் பார்க்கிறேன். மிட்டாய் கடையை வேடிக்கைப் பார்த்ததைப்போல பார்த்து முடிவில் யாராவது நம்மையும் பேசச்சொல்லி மாட்டிவிடுவார்களோ? என முழித்து மீண்டும் ஒரு சிலரிடம் அவசரமாக அறிமுகப்படுத்திக்கொண்டு முதலில் சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினேன். நானும் எழுதிட்டேன்ல. நானும் பதிவர்தான். என் போட்டோவும் இருக்கு ஒரு இடத்திலே. வணக்கம்...வணக்கம்.


24 comments:

ஈரோடு கதிர் said...

அட.... அரும போங்க

இன்னோ நெரய எழுதுங்க

செல்வநாயகி said...

தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.

ஆரூரன் விசுவநாதன் said...

அழகாக நிகழ்வுகளை பதிவு செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.....தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எங்கள் ஆவல்.....

Balakumar Vijayaraman said...

வணக்கம் ஐயா.
வாழ்த்துகள், வரவேற்புகள்.

vasu balaji said...

ஆரம்பமே அசத்தலான அறிமுகம். நான் மட்டும்தான் அப்புடி இருந்தேன்னு பார்த்தா, எம்பின்னாடி இருந்த நீங்களுமா? ஹ ஹ ஹா.

நாகா said...

ஐயா, இன்னும் நெறய எழுதுவீங்கன்னு எதிர்பாக்கறேன்.. உங்களோட PHC, கிராம சுகாதாரம், மெடிகல் கேம்ப்கள்னு நெறய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருக்குமே.. எல்லாத்தையும் எழுதுங்க. என்னோட வலைத்தளம் - http://naga-thoughts.blogspot.com

-நாகா,
உடுமலை

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அப்பா...தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

வாங்க தலைவா.. நெறய எழுதுங்க!!
காத்திருக்கிறோம்...
http://kalakalkalai.blogspot.com/2010/01/blog-post_10.html

சிநேகிதன் அக்பர் said...

ஆரம்பமே அசத்தல்.

உங்கள் அனுபவங்களை பெற காத்திருக்கிறோம்.

sathishsangkavi.blogspot.com said...

தலைவரே வணக்கம்.... வாங்க வந்து நீங்களும் உங்க அனுபவத்தை சொல்லுங்க...

தாராபுரத்தான் said...

என்னை மாட்டிவிட பார்ப்பவர்கள்!!!
கதிர்,செல்வநாயகி,ஆருரார்,வி.பாலகுமார்,வானம்பாடி,நாகா,திருநாவுக்கரசு.பழனிசாமி,கலையரசன்,அக்பர்,சங்கவி பொங்கலோ பொங்கல்!!!!நன்றியோ நன்றி!!!!

எல்லா புகலும் திருப்பதி(வழி ஈரோடு) பாலாஐி க்கே !!!!

புலவன் புலிகேசி said...

வாங்க..உங்களை மாதிரி அனுபவஸ்தர்களின் பதிவு தான் எங்களை மதிரி இளைஞர்களுக்கு தேவை. எழுதுங்க

தாராபுரத்தான் said...

vஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க புலிகேசி!

Mahesh said...

வருக வருக அப்பன் !!!

நானுமு உடுமலைதானுங்கோவ்....

Vidhyapriya Palanisamy said...

சூப்பருங்க Daddy !!! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ....

சிநேகிதன் அக்பர் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தாராபுரத்தான் என்றதும் சின்னவயசு என்று நினைத்து விட்டேன். (எழுத்துக்கு என்ன வயசு வேண்டி இருக்கு?) தங்கள் அனுபவம் கொண்டு எழுத வாழ்த்துக்கள். நன்றி அய்யா..

தாராபுரத்தான் said...

தோழன் மபா என்றதும் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்,.அப்புறம் பார்த்தா வாழைப்பழம் காமிச்ச தஞ்சாவூர் தம்பி.

தாராபுரத்தான் said...

சொல்லி கொடுத்ததை தெளிவாசொல்லி கொடுக்காம அறை குறையா சொல்லிக் கொடுத்து விட்டாயே வித்யா.

தாராபுரத்தான் said...

மகேசு, அக்பர் vஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யா வாங்க..
பின்னிப்பெடலெடுங்க...

பழமைபேசி said...

வணக்கமும் வாழ்த்துகளும்! அனுபவசாலியான உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதில் மிகவும் அகமகிழ்கிறேன்!

manjoorraja said...

மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

விரைவில் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.

cheena (சீனா) said...

அன்பின் தாராபுரத்தான்

ஈரோடு வந்திருந்தீர்களா - சந்திக்க இயலவில்லையே - ம்ம் - தாரபுரம் வருகிறேன் -சந்திப்ப்போம் - பிறகு ......

நல்வாழ்த்துகள் தாராபுரத்தான்
நட்புடன் சீனா