Monday, September 13, 2010

உறவுகள் எத்தனை...


தினமும் இணையத்தில் ஒவ்வொருத்தருடைய பதிவுகளை படிக்கும்போதும் அடடே..இவுங்க இப்படி சிந்தித்திருங்காங்களே.. நமங்கு எங்கே போச்சு புத்தி? (மரியாதையா சொன்னா அறிவு..) நமக்கும்தானே அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கு.. ஆனா அதை ஏன் பதிவா போடலை? போடலாம்ன்னு நமக்கு ஏன் தோணலை? சரி போனது போகட்டும் இன்று பதிவு போட ஏதாவது அனுபவம் கிடைக்குமா? என ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டியது..அங்கே போய் பார்த்தா நம்ம அனுபவத்தையே ஒருத்தர் அனுபவித்து எழுதிருப்பார்...நடுரோட்டிலே லிப்ட் கேட்ட ஒருவன் வழிப்பறியா இருப்பானோ? என நமது மனது நினைப்பதைக்கூட பதிவில் தொட்டுப்பார்க்க கதிர்களால் முடிகிறது. ஏன் நம்மால் முடிவதில்லை..இப்படியே காலத்தை ஒட்டாம...நிகழ்வு ஒன்றை பதிவு செய்வதாக முடிவு செய்தாச்சு..

ஒவ்வொருவரும் பிறந்தவுடன் பல உறவுகள் உண்டாகிறது. அம்மா அப்பாவுக்கு மகனாகிறோம், நமக்கு முன்னே நமது பெற்றோர்களுக்கு பிறந்தவங்களுக்கு தம்பியாகிறோம், தாத்தா..பாட்டிக்கு பேரனாகிறோம், அப்படியே உறவுகள் தொடர்கிறது. பெற்றோர்கள் வைக்கும் பெயருக்கு சொந்தகாரர்களாகிறோம், பள்ளி பருவத்தில் நண்பனாகிறோம், தில் இருந்தா காதலனாகிறோம், கல்யாணம் பண்ணிக்கிட்டா கணவராகிறோம். அதனை தொடர்ந்து உறவுகள் மாமன், மச்சான் என ஓட்டிக்கொண்டு உறவாடி மகிழ்ந்து போகிறோம்.

நமக்கென குழந்தைகள் பிறந்தவுடன் அப்பாவாகிறோம். அந்த குழந்தைகளுக்கு மணம்முடித்தவுடன் சம்மந்தியாகிறோம். நமது குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தாத்தா..பாட்டியாகிறோம். முதலில் மகன் என்ற உறவுடன் வந்த நாம்.. தாத்தாவாகி ஓய்வு பெறுகிறோம். என்ன இது? ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..
32 comments:

வானம்பாடிகள் said...

தாத்தாவாக்குன பிஞ்சுக்கு வாழ்த்துகள். அண்ணனுக்கு வணக்கங்கள்:)

Chitra said...

மிகவும் சந்தோஷமான செய்திங்க..... வாழ்த்துக்கள்! இனி புது பொலிவுடன், கொண்டாடுங்க!

பழமைபேசி said...

வாழ்த்துகள் அண்ணா; நெம்ப நாளா ஆளைக் காணோமுன்னு ஒரே யோசனை!!!

க.பாலாசி said...

//பழமைபேசி said...
நெம்ப நாளா ஆளைக் காணோமுன்னு ஒரே யோசனை!!!//

எனக்கும் அதே யோசனை இருந்துச்சு... ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் நல்ல சேதியோடல்ல வந்திருக்காரு... வாழ்த்துக்கள் அய்யா...

சேட்டைக்காரன் said...

வாழ்த்துகள் ஐயா! :-)

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

DrPKandaswamyPhD said...

இனிய வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அதானே பாத்தேன்...தாத்தா இப்ப ரொம்ப பிஸி !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் ஐயா.

தாத்தாவின் அனுபவங்களை பதிவுகளாக எதிர்பார்க்கிறோம்.

சே.குமார் said...

மிகவும் சந்தோஷமான செய்திங்க..... வாழ்த்துக்கள்!

velji said...

C O N G R A T S!

E Valavan said...

Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

துளசி கோபால் said...

குழந்தைக்கு ஆசிகளும் தாத்தாவானதுக்கு இனிய பாராட்டுகளும்.

நாடோடி said...

இனிய‌ வாழ்த்துக்க‌ள் ஐயா.

VELU.G said...

தாத்தாவிற்கு வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

நன்றிங்க வானம்பாடிகள் சார்.

தாராபுரத்தான் said...

நீங்க பிறந்த பொழுதைவிட உங்க குழந்தையை நீங்க கொஞ்சும் அழகை நாங்கள் பார்ப்பதில் மகிழ்ச்சி அதிகம்தான் சித்ரா.

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சிங்க பழமை தம்பி..

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சிங்க பாலாசி..உங்களுக்கு சொல்லாம காணாம போவேனா? அலைபேசியில் தொந்தரவு தரககூடாதே..

தாராபுரத்தான் said...

நன்றிங்க சேட்டைக்கார தம்பி.

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சி..மகிழ்ச்சி..மகிழ்ச்சி..கண்ணகி

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க அய்யா..வாழ்த்துக்கு நன்றிங்க.

தாராபுரத்தான் said...

ஆமா ஹேமா..பார்ட்டி கேக்கிறவங்க..கேக்கு கேட்கிறவங்க..அதுதானே வாழ்க்கை.

தாராபுரத்தான் said...

நன்றிங்க குமார்.

தாராபுரத்தான் said...

வேலுஐீ நன்றிங்க

தாராபுரத்தான் said...

மகிழச்சிங்க செந்தில் வேலன்.

Anonymous said...

வாழ்த்துக்கள்!!!!!

அன்னு said...

வாழ்த்துக்கள் சார். தாயும் சேயும் நலமாய் வாழவும், குடும்பத்தில் அன்றைய தினம் போல் என்றுமே சந்தோஷமும் கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கவும் வாழ்த்துக்கள். ஸ்வீட் எங்கே?

Ananthi said...

///ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..///

ரொம்ப சந்தோசம்... தாய்க்கும், சேய்க்கும்...... தாத்தாவிற்கும்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :-)))

Ananthi said...

///ஆமாங்க..செப்டம்பர் இரண்டில் எனது மகள் ஆண்குழந்தையை பெற்றெடுத்து என்னை ‘தாத்தா’ ஆக்கிவிட்டாள்..///

ரொம்ப சந்தோசம்... தாய்க்கும், சேய்க்கும்...... தாத்தாவிற்கும்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :-)))

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் பழனிச்சாமி அண்ணா. சாரி தாத்தா :)

தெய்வசுகந்தி said...

vaazththukkaL