Tuesday, September 21, 2010

இந்த கதை எப்படி?

வாழ்க்கை ஒரு போராட்டம் பல பேருக்கு. வாழக்கை ஒரு தேரோட்டம் சில பேருக்கு. இந்த காலத்தில் பெண்ணை பெத்தவங்க பெண்ணை வளர்த்தி படிக்க வைச்சு, வேலைக்கு அனுப்பி அழகு பார்த்து, ஆளானதும் இனி நாம துள்ள முடியாதே என வருத்தப்பட்டு பின்பு மகிழ்ந்து..காலம்ஓட...பொண்ணு ஜாதகத்தை எடுத்து சோசியம் பார்க்க அலைந்து நல்ல வரன் கிடைக்க வேண்டி..பெண்ணின் ஜாதகத்தை நகல் எடுத்து விநியோகித்து....நல்ல ஜாதகம் இருக்குது அப்படீன்னு தகவல் வந்தா மனசு இறக்கை கட்டி பறந்து...

பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரிந்தா மகிழ்ச்சியா எதிர் நோக்கி..அவர்களுக்கு பிடித்தா நமக்கு பிடிப்பதில்லை...நமக்கு பிடித்தா அவர்களுக்கு பிடிப்பதில்லை என சலித்து...கையில் இருக்கும் காசுயெல்லாம் கரைந்த நிலையில் பக்கத்து வீட்டு வரனே வந்து கதவைத்தட்ட, தடபுடலா திருமணத்தை நடத்த எண்ணி...காஸ்ட்லியான கல்யாண பத்திரிக்கையில் ஆரம்பித்து..இது நமக்கு தேவையா என யோசித்து..கல்யாணம் முடிந்து..அப்பாடாயென உட்கார்ந்தா..அப்பத்தான் கடமையே தொடங்குதாம்.. எல்லாம் இருக்குதுன்னு அக்கா (சம்பந்தி) சொல்லுவாங்க. என்னதான் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் நல்லவங்களா இருந்தாலும் நம்மாலை இருக்க முடியுதா?

அருவாமனையிலிருந்து கறிவேப்பிலை வரை பார்த்து பார்த்து வாங்கி தனிக்குடித்தனம் வைத்து ...அடிக்கடி விசிட் செய்து .. விசிட் செய்யும் போதெல்லாம் லக்கேஜ்களுடன் மகள் குடித்தனம் நடத்தும் அழகை பார்த்து ரசித்து திரும்பினால்..மகளிடம் இருந்து அம்மாவுக்கு சிறப்புச் செய்தி...நாட்கள் தள்ளிபோய்விட்டது என்று...உடனே இந்த அம்மா மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து...போன வாரந்தானே திரும்பினோம்..மறுபடியும் துணைக்கு கெளரவ அழைப்பாளரா நம்மையும்....

காசை செலவழித்தால் மட்டும் போதாதுங்க..கால முழுவதும் பொண்ணுக்கு நாமதான் துணையிருக்கணும்..அதுதான் கெளரவம்..பாசம்...அப்படின்னு நமக்கே வகுப்பு எடுத்து...மருத்துவ பரிசோதனையில் ஆரம்பிக்கும் செலவு...அடுத்து வளைக்காப்பு..நமக்கு எதிரி வருகிற சம்மந்தியோ..மாப்பிள்ளைகளோ அல்ல...நம்ம வீட்டு தெய்வங்கதான்...வளைக்காப்புக்கு இத்துணை பவுனுக்கு வளையல் போடவேணும் என தூண்டில் போட்டு மீனைப்புடித்து சாதித்து..வளைக்காப்புக்கு எத்தனை பேரை அழைப்பது..எப்படி சமையல்..எங்கு விழா?..என ஒரு மினி திருமணமே நடத்தி..அப்பாடா என இருக்கமுடியுதா?

எப்படா வரும் மகப்பேறுநாள் என எதிர்பார்த்து ..மகளுக்கு வலி என அறிந்ததும் அத்தனையும் மறந்து ஆளாய் பறந்து..எவ்வளவு பணம் செலவானலும்..என் மகளுக்கு வலியே தெரியக்கூடாது...என மருத்துவத்திற்கே மருத்துவம் பார்த்து....அஞ்சு நிமிடத்தில் அழுகை சத்தம்.... அனுபவித்தவர்கள் நினைத்து பாருங்கள்.. அனுபவிக்காதவர்கள் கால ஓட்டத்தில் கண்டிப்பாக அனுபவிக்க வாழ்த்துக்கள்...

என்னடா இது முற்றுப்புள்ளி வைக்காமையே கதை எழுதி கிழித்திருக்காரு.. அப்படீன்னு யாராவது நினைக்க போறீங்க..மூச்சு விட முடிந்தா தானே முற்றுப்புள்ளி வைப்பது. நேத்து ஆரப்பிச்ச மாதிரி இருக்குது. நேற்று பொண்ணு சொல்லுது ‘பிறந்தது பொண்ணா இருந்திருந்தா..பேசாம உங்க பராமரிப்பிலேயே விட்டுவிடலாம் என்று இருந்தேன்.. பையனா போச்சே.. உங்களை நம்மி விட முடியாது..செல்லம் கொடுத்தே கெடுத்து விடுவீர்கள்’ என்று. இந்த காலத்திலே பையனைத்தான் பொத்தி பொத்தி வளர்க்கணும்..அன்பால கட்டிப்போட்டு அறிவை புகட்டணும். அப்பத்தான் உங்களை மாதிரி அம்மா பேச்சை தட்டாம கேட்கிற மாதிரி என் மகன் அவன் மனைவி பேச்சை ஆயுள் முழுவதும் கேட்பான் அப்படீங்குதுங்க.. எப்படி இருக்குது கதை.. வணக்கமுங்க.15 comments:

பழமைபேசி said...

பேரனுக்கும் சேர்த்து வணக்கமுங்க அண்ணா!!!

கண்ணகி said...

இந்தத் தாத்தாக்களே இப்ப்டித்தான்...சலிச்சுக்கறீங்க...வேலைபூராவும் பாட்டிக்குத்தானே...பெயரனுக்கு பெயர் வைத்துவிட்டீர்களா..

ஹுஸைனம்மா said...

அதானே, கூட துணைக்கு வர்றது மட்டும்தான் தாத்தாக்கள் வேலை!! அதுக்கே இவ்வளவு சந்தோஷச் சலிப்பா..

வாழ்த்துகள் சார்!!

திருஞானசம்பத்.மா. said...

//.. செல்லம் கொடுத்தே கெடுத்து விடுவீர்கள் ..//

எல்லா அப்புச்சிகளும் இப்படித்தானா..??!!

அன்னு said...

எங்க வீட்டிலயும் இதேன் பிரச்சனை. ஆனா பொண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி, செல்லம் அவ்ளோ தரக்கூடாதுங்கறதுதேன் நெசம். அதுவும் தாத்தா பாட்டி செல்லம்னா சொல்லவா வோணும். மத்தபடி வேறெதுவும் மனசுல வச்சிட்டு சொல்றதில்ல சாமி. தப்பா எடுத்துக்க கூடாது.

வானம்பாடிகள் said...

நல்லாருக்குண்ணே கதை:)

Chitra said...

ஒரு தாத்தாவின் செல்ல "complaint" ....... அழகு.

DrPKandaswamyPhD said...

இதுதாங்க வாழ்க்கை. காலம் காலமா நடந்துட்டுதான் இருக்கு. பேரனுக்கு அவங்க அப்பாறு பேரையில்ல வைப்பாங்க. நாம செலவு பண்றதுக்கு மட்டும்தானே.

நாடோடி said...

தாத்தாவுக்கும் பேர‌னுக்கும் வாழ்த்துக்க‌ள்.

சிநேகிதன் அக்பர் said...

சீக்கிரமே பேரனுக்கு ப்ளாக் எழுத கற்றுக்கொடுக்கவும்.

நல்ல ரசனையுடன் எழுதியிருக்கிங்க. :)

Jayaseelan said...

சூப்பருங்க

பாரத்... பாரதி... said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

மனோ சாமிநாதன் said...

அருமை! ஒரு தந்தையின் உணர்வுகளையும் அவர் சந்திக்கும் நிகழ்வுகளையும் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

அன்னு said...

சார், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்