உள்ளாள் வைத்து வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? கேட்டிருக்கீறிர்களா? உதாரணத்தோட விளக்கினா போச்சு.
நம்ம கதையே ஒண்ணு இருக்குதுததல்ல. 1971ல் நாட்குறிப்பை பார்த்துதான் நமக்கே ஞாபகம் வந்தது. கோயமுத்தூரில் நம்ம உறவு ஆத்தா ஓண்ணு கண்ணு ஆப்ரேசனுக்காக ராயல் தியேட்டருக்கு அருகிலுள்ள ஞானா பரணம் கண்ணு ஆஸ்பத்தியிலே பண்ணிக்கிட்டதால துணைக்கு அய்யா போக வேண்டிய பாக்கியம் கிடைத்தது. அப்பவே கோயமுத்தூர் போறதுன்னா நம்ம ஊரில் பெரிய மரியாதையில்ல. நானும் ஐம்முன்னு கிளம்பிட்டேன். கிழவிக்கு காவல் என்ற பெயரில் ராயலில் ஒண்ணு பக்கத்திலே இருதயாவுலே ஒண்ணுன்னு ஒரே ராத்தியிலே இரண்டு படம் பார்த்து போட்டு நல்ல குடி நாச்சி மாதிரியில்ல இருந்தேன். மறுநாள் காலையிலே அப்படியே சும்மா ஒரு பொடி நடை விடலாம்ன்னு மேலாக்கு பாத்துக்கிட்டே நடந்தேன். எதிரில் ஒரு அண்ணன் வந்தாரு. வந்தாரா...ம்..ன்னு சொல்லுங்க. அப்பத்தேன் சுவாரசியமா சொல்ல வரும்.
அண்ணாச்சி என்னைப் பாத்தாரு. நான் அவரைப் பார்த்தேன். கீழே குனிந்து ஓரு பொட்டணத்தை கையில் எடுத்தாரு. எடுத்தாரா.. நான் அவரை பார்த்தேன்.. அவர் என்னை பார்த்தாரு.. எனக்கு தெரியிற மாதிரி தெரியாம பிரிச்சாரு...நான் அவரை பார்த்தேன்..அவர் என்னை பார்த்தாரு. நான் அவரு கையிலிருக்கிற பொட்டணத்தையும் பார்த்துபுட்டேன். நான் பார்த்துபுட்டேன்கிறதை அவரு பாத்துபுட்டாரு. ..புட்டாரா... அழகான சரிகைப் பேப்பரில் தங்க செயின் ஒண்ணு மடித்திருந்தது. உடனே என் கையை பிடித்து தம்பி யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம்... செயினை நான் வைத்து கொண்டு உங்களுக்கு பணம் வேணும்னா தர்றேன் அப்படின்னாரு...எனக்கு வந்ததே கோபம்..நம்மளை கூமட்டையின்னு நெனைச்சுட்டான் போல அப்படின்னு நான் நெனைத்து ..நான் வேணும்னா உனக்கு பணம் தர்றேன் எனக்கு கொடுங்க செயினை அப்படின்னே..
தம்பி தம்பி.. எங்கிட்ட 150ருபாய் தான் இருக்கிது. .அதை வாங்கிட்டு ஒண்ணும் தெரியாம போங்க தம்பி... இந்த சமயத்தலே எங்க எதிரில் ஒருபெரியவர் பதறி அடித்தபடி அழுது கொண்டும் தேடிக் கொண்டும் வந்தார். அய்யா எனது மூணு பவுனு செயினைக் காணாம்.. பார்தீங்களா? நேற்றுதான் ரூ.600 க்கு வாங்கினேன்ன்னு அழுதுகிட்டே போறாரு. நான் உடனே அவரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என நினைக்கும் போது நம்ம அண்ணன்..பாசத்தோட... தம்பி..பேசாம இருங்க செயின் எனக்கு இல்லாட்டியும் பரவாயில்லை.. நீங்களே வைச்சுங்கோ..ன்னு பாச கயித்தை வீசுனாரு. தப்பிக்க முடியாம ..பாசத்திற்கு கட்டு பட்டு ..அண்ணே எங்கட்ட 110 ரூ. தான் அண்ணே இருக்குது..பரவாயில்லை தம்பி.. அதையாவது சீக்கிரம் கொடுங்க அந்த ஆளு வர்ராரு..பணத்தை புடிங்கிட்டு விட்டாரு சூட்......அது வரை மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்த நான் உடனே பவுனு ரூ.200. ரூ.110க்கு 3 பவுனா அப்படின்னு நினைத்தேன்.
ஆ...ஹா.. நாம எந்த ஊருன்னு தெரிந்து பாசத்திலேயே கட்டி போட்டுட்டு போயிட்டாரே . அண்ணா.........அண்ணா...ன்னு கவிதை பாடின்னா எழுந்து வரவா போராரு. அப்பத்தான் தெரிந்தது கோயமூத்தூர்காரன் உள்ளாளு வைத்து வூட்டியை மடக்கிட்டான்டான்னு. இதல யாரு உள்ளாளு.? பதறி அழுதுகிட்டு வந்தாரே அவருதான் நடிகர் திலகம். இதை வெளியில யாருகிட்டேயும் சொல்ல கூடாதுன்னு பாதுகாத்து வைச்சிருந்தேன். ஆனா ரகசியத்தை பதிவுக்காக பங்கு போட வேண்டியதாக ஆகிப் போச்சு. இது மாதிரி ஊட்டியை மடக்கிய சம்பவம் உங்ககிட்டேயும் இருக்கும் இருந்தால் என்னை மாதிரி வெளியே சொல்லி திரியாதீர்கள். கை கூடி வருது மாதிரி தெரியுது. வணக்கம். வர்றேன் சாமிகளா.
37 comments:
இருதயா????
நல்ல அனுபவம்தான். தொலைச்சவங்க எப்படி புலம்பியிருப்பாங்கன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வலிக்குது...
பிரபாகர்.
நல்லாத்தான் நடிச்சிருக்காங்க :))
ஏப்பா பாலாசி. தனியா அண்ணனுக்கு ட்ரெயினிங் குடுக்குறியா என்னா? அனியாயத்துக்கு அழிம்பு தாங்கல:)).
//வானம்பாடிகள் said...
ஏப்பா பாலாசி. தனியா அண்ணனுக்கு ட்ரெயினிங் குடுக்குறியா என்னா? அனியாயத்துக்கு அழிம்பு தாங்கல:)).//
ச்சு....பப்ளிக்....பப்ளிக்....
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..
பித்தளையை தலையில கட்டிட்ட்டாங்களோ. உங்களுக்கு வேணும்.
அந்த இளிச்சவாய் ஆருன்னு சொல்லமாயே போயிட்டீங்களே கடைசி வரைக்கும்....
படிக்கறங்களக்கு மடடும் உண்மையை சொன்னா போச்சு அப்படின்னுதான் முழுக்கதையும் சொல்லலை.3.ரூ. பெறாத பித்தளை செயினை தலையிலை கடடிடிட்டு போயிட்டானே சண்டாளன்.கண்ணகி கண்ணு கரெக்டா கண்டுபிடித்து போடுச்சு.என்ன இருந்தாலும் நம்ம புள்ளை அல்லவா.
வாங்க டாக்டர் சார்...
தம்பி பிரபா நான் சாமி தொலைத்சுட்டேன்.
இங்கே இதைவிட பெரிய திருகு தாளங்கள் நடத்துவார்கள். இதைச் செய்வோர் பொதுவாக வந்தேறுகுடிகளாக இருப்பது உண்மை.நடக்கும் கூத்தை தூர நின்று ரசிப்பேன்.
ரசிக்க ஆளுஇருந்தா எல்லோரும் ந்ல்லாத்தான் நடிப்பாங்க.. சை.கொ.புரோட்டா.
உங்களுக்கு ரகசியம் தெரிந்து போச்சா அண்ணா..வானம்பாடி அவர்களே.
நம்ம தம்பி பாலா என்ன வேணும்னாலும் சொல்லுங்க.
அப்படித்தான் கண்ணு நினைக்க தோணுது திவ்யா..
போங்க தம்பி பழமை..நீங்க எப்பவுமே தமாசுதான்.
அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்பட்டா இப்டித்தான் உள்ளதும் பூடும்...
கதை நல்லாவே சுத்துறீங்க...விளக்கம் அருமை..இதுதான் கோயம்புத்தூர் குசும்பா?..
அடப் பாவமே, என்னத்த சொல்ல....... !
nalla rayil payananm . nalla ottureengka. rasikkum padi irukkuthu. vaalththukkal.
அந்த காலத்திலேயே அப்படித்தான் இருக்கா ?
ஒ..ஒ..யோகன் அஙகேயும் அப்படித்தானா?
அண்ணாமலையான் said...
அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்பட்டா இப்டித்தான் உள்ளதும் பூடும்...
February 19, 2010 8:10 PM
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படடா அரோகரான்னு சொல்ல வரீங்க,அண்ணாமலையான்.
கதை நல்லாவே சுத்துறீங்க...விளக்கம் அருமை..இதுதான் கோயம்புத்தூர் குசும்பா?..
February 19, 2010 8:11 PM
நாடோடி நண்பா சுத்தல் இலலைங்க. நடந்த உண்மை.நானு குசும்பு பண்ண கோயமுத்தூர் அல்ல.
Chitra said...
அடப் பாவமே, என்னத்த சொல்ல....... !
சித்ரா ..ஆமா தாயி நீயாவது வருத்தப்படு.
nalla rayil payananm . nalla ottureengka. rasikkum padi irukkuthu. vaalththukkal.
February 19, 2010 10:55 PM
நான் ஏமாந்ததை மருதை சரவணன் நல்லா ரசிங்க.
நான் ஏமாந்ததை மருதை சரவணன் நல்லா ரசிங்க.அந்த காலமா? நம்ம பாட்டன் பூட்டன் காலத்திலையே இருந்திருக்குதுங்க.நசரேயன் /
நேரங்காலமே எந்திரிச்சு, அண்ணன் பின்னூட்டம் போடுறார் போலிருக்கு.... நல்லது நல்லது...
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இருதயா???//
ஒடனே பொண்ணுன்னு நினைப்பீங்களா நெய்க்காரபட்டி? இது சினிமாக் கொட்டாய்ங்க....
அதே வேளையாவுள்ள இருக்கிறோம்.ராத்தி என்ன பகலென்ன.
அடக்கொடுமையே....
பிரபாகர் கமெண்ட்தான் தூள்!!!!
நல்ல அனுபவம் இது வடிவேலு காமிடி இல பார்த்த மாற்றி இருக்கு .
ஆத்தாவுக்கு கண் ஆபரேஷன்
பாத்துக்க போனவருக்கு கள்ள ஆபரேஷனா?
நல்லகோஆப்ரேஷனான திருடங்க போல!
அன்னைக்கு நைட்டு ஆத்தாவுக்கு வச்சிருந்த பன்னுதானே சாப்பிட்டீங்க?
உங்களையே ஏமாத்திட்டாங்களா? so bad....
Post a Comment