Tuesday, February 2, 2010

எங்கே கூட்டிப்போகிறார்கள்........


நண்பர் ஒருவர் ஆசிரியப்பணியே அறப்பணி என்று வாழ்ந்து வருபவர். அவரை நேற்று சந்தித்தேன்.மிகவும் சோர்வாக இருந்தார். ஏண்டா இந்த வேளைக்கு வந்தோம் என்று இருக்குது என சலித்துக் கொண்டார். நான் கிண்டலாக மவராசன் ஆட்சியிலே உங்களுக்குதான் அள்ளி அள்ளி கொடுத்திட்டாரே.. அப்புறமென்ன நண்பா..என்றேன். அதன் பின்பு அவர்கள் துறையில் போட்டி போட்டு நடந்து வரும் பொறுப்பில்லாத அதிகாரிகளின் போக்கை பார்த்து மனம் வெதும்புவதாக கூறினார். நானும் பதிவுக்கு நல்ல மேட்டர் கிடைக்கும் போல இருக்குது என எண்ணி கொஞ்சம் விரிவாத்தான் சொல்லுங்களேன் என்றேன்.


தமிழ்நாட்டில் பள்ளி கல்வித் துறையில் தேர்ச்சியை அதிகரித்து காட்ட வேண்டும் என்று மானாவாரியாக செயல்பட்டு கல்வியை சீரழித்து வருகிறார்கள். இது எங்கே போய் முடியுமோ? என்றார். எப்படி என்று கேட்டேன். ஒரு மாணவன் 25 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சியளிக்கவேண்டும் என்பது பள்ளி கல்வித் துறையின் விதி. மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மேற்காண் விதி முறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.


ஆனால் இன்று நடப்பது என்னவென்றால் ஒருபள்ளியில் தேர்ச்சி விகிதத்தை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற எடுத்துச்சென்றால் 5 சதவீதம், 8 சதவீதம், 10 சதவீதம் உட்பட மதிப்பெண் வாங்கியிருக்கும் மாணவர்களையும் 25 சதவீதமாக உயர்த்தி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டினால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கும் என சாட்டையடியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். வாத்தியார்களும் ..ஒ..கே.. வாத்தியார்களுக்கே வகுப்பா என ஒருமுடிவுக்கு வந்து எவன் படித்தால் என்ன,,,படிக்காட்டி என்ன..நமக்கு படி வருதா..மானாவாரியா எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக போய் வருக என ஆசி வழங்கி மேல் வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.


போனா போகுது விடு நண்பா என்று ஆறுதல் கூறினால், அவர் மிகவும் வருத்தமாக உள்ளது. தனது மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் தரம் அறியாமல் மாணவர்களின் தராதரம் பார்க்காமல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்தால் தமிழ்நாட்டின் பள்ளி கல்வியின் எதிர் காலம் என்னாகுமோ என கவலைப்பட்டார். இதனை வெளியே சொல்ல முடியாமல் சில ஆசியர்கள் மனம் வெதும்பி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே விட்டுவிட்டார்களாம். நாட்டு நடப்பை அனுசரித்து நாட்களை கடத்துங்கள் நண்பா என வாத்தியார்ருக்கே வகுப்பு எடுத்து விடை பெற்றேன்.


இதை படிக்கும் யாருக்காவது எதையாவது சிந்திக்க தோன்றினால் வெளியே யாரிடமும் சொல்லாமல் சிந்தித்து சிரிக்க முடிந்தால் சிரித்து அழ முடிந்தால் அழூது தொலையுங்கள். இந்த நாட்டில் எதை எவனிடம் சொல்லி என்ன நடக்கப்போகிறது. வணக்கம். வரட்டுங்களா....



17 comments:

vasu balaji said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை:(

நசரேயன் said...

//நாட்டு நடப்பை அனுசரித்து நாட்களை கடத்துங்கள் நண்பா என வாத்தியார்ருக்கே வகுப்பு எடுத்து விடை பெற்றேன்.
//
நல்ல பாடம்

பாவக்காய் said...

நம்ம ஊரு கல்வி நிலை இப்படி போய்கொண்டு இருக்கிறதா ? - வருத்தமாகத்தான் இருக்கிறது !!

Unknown said...

இந்த முறை விஷம் போன்றது நண்பரே... கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாட்டையே அழிக்கவல்லது...

இது அரசு பள்ளிகளில் மட்டுமல்ல... நான் பார்த்தவரை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 12 முடித்தவர்கள் கூட ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதுவும் ஒரு மோசமான சூழலே...

சராசரியிலும் சராசரி மாணவர்களால் கூட நிறைய சாதிக்க முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினால் போதும்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முன்னெல்லாம் குழந்தைகளின் அறிவை அதிகரிக்க பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினாங்க. ..
இப்போ பள்ளிக்கூடத்துக்கு போனா குழந்தைகளோட அறிவு மழுங்கிடுது..

sivaG said...
This comment has been removed by the author.
Ponchandar said...

அரசு பள்ளி ஒன்றில் என் மனைவி ஆசிரியையாக பணி புரிகிறார்கள். அங்கே நடக்கும் அவலங்களை அவ்வப்போது கூறுவதுண்டு. தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க பாடங்களை நன்றாக சொல்லிக் கொடுக்காம்ல் Grace Mark போட்டு தேர்ச்சி பெற வைத்து % அதிகமாகக் காட்டுவது மிக மோசமான நம் கல்வி நிலையைக் காட்டுகிறது. இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கே புரியப் போகிறது ????

Chitra said...

இந்த நாட்டில் எதை எவனிடம் சொல்லி என்ன நடக்கப்போகிறது. .............

இது தேசிய புலம்பல் கீர்த்தனை. என்ன செய்ய?.........

விக்னேஷ்வரி said...

ரொம்ப வருத்தமான விஷயம் தான்.

பிரேமா மகள் said...

ஒரு ஆசிரியையின் மகளாக நானும் இதை உணர்கிறேன். ஒத்துக் கொள்கிறேன்.

தாராபுரத்தான் said...

நன்றிக்குரியவர்கள். 1,வானம்பாடிகள். 2.நசரேயன். 3.பாவக்காய். 4. கிருஷ்ண பிரபு. 5திருநாவுக்கரசு.பழனிச்சாமி. 6.பொன்சந்தர். 7. சித்ரா. 8.விக்னேஸ்வரி. 9.பிரேமா மகள்.

Anonymous said...

First of all, forget worrying about disqualified students being promoted. Thats not the problem. The problem is why do we even have a student who is not able to score 35% of marks. Isn't that the shame on teachers. Why can't they work towards everybody being able to score more than 35%. If thats' the case why would the government even bother the teachers to do anything wrong?

Anonymous said...

This is the bloody attitude problem in India. We think that naturally some students are not qualified to learn. No matter how the teacher tries, they are going to fail. That's the assumption. Thats the same mentality in your so called friend who is worried about this matter.

IS N'T IT THE MOST SHAMEFUL THING FOR A TEACHER?

புலவன் புலிகேசி said...

நடக்குற கல்வி முறையே தப்புன்னு நாங்க கவலப்பட்டு கிட்டிருக்கோம். என்னத்த பண்றது...

அன்புடன் மலிக்கா said...

கல்வி வியாபாரமாகிவிட்டது. வேறேன்ன சொல்ல.

நேரம்கிடைக்கும்போது என் தளத்திற்கு வருகை தாருங்கள்..

தாராபுரம் எந்தோழியின் ஊர்..

சிநேகிதன் அக்பர் said...

என்னத்தை சொல்ல சார் வருத்தமாத்தான் இருக்கு.

தாராபுரத்தான் said...

யாரோ ரெண்டு பேரு சோரா கருத்துரை கொடுத்திருக்காங்க.நன்றிங்க. அன்புடன் மலிக்கா,எங்க ஊருக்காரருக்கு தோழி உங்க தளத்திற்கு கண்டிப்பா அடிக்கடி வருவோம்.நன்றி. அக்பர் ஏனுங்க லேட்டு. நன்றிங்க.