Monday, May 24, 2010

வாங்க காற்று வாங்கலாம்..வாங்க காற்று வாங்கலாம்.. வெய்யிலிலிருந்து விடுதலை. எங்க ஊரில் காற்று சித்திரையில் சீர் பூட்டி விடும். ஜுன், ஜுலை மாதங்களில் எங்க ஊருப்பக்கம் வந்து பாருங்க. வந்து பார்த்தவங்களுக்கு தெரியும். அடிக்கின்ற காற்றில் அம்மியே பறக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும் சூறைக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சொய்...சொய்வென இறைச்சலுடன் காற்று வீசும் அழகே தனி. காடு மேடெல்லாம் புழுதி பறக்கும். வீட்டுக்குள்ளே மண்ணை கூட்டி மாளாது. பாழாய் போன காத்து என இயற்கையை நொந்தபடி வீட்டை கூட்டுவார்கள் எங்க வீட்டு அரசிகள். அடிக்கின்ற காற்றை அதிசியமாக பார்ப்பார்கள் புதிதாக இந்த பக்கம் வருகிறவர்கள். பழனியை பார்க்க வருகிறவர்கள் எங்க ஊரு வழியாகத்தானே போகணும். அது ஒண்ணுதான் எங்க ஊருக்கு பெருமை.. அப்புறம் காற்று.. காத்துன்னுதான் சொல்லி பழக்கம்.

பாலக்காட்டு கணவாய் இடைவெளியில் எங்கஊரு வருவதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பல்லடம், உடுமலைப்பேட்டை, பழனி, தாராபுரம், மூலனூர் மற்றும் வெள்ளகோவில் என ஒருரவுண்டு கட்டி காற்று வீசும். மணல் மழை பொழியறதை நேரில் பார்க்கலாம். இன்னும் பார்த்ததில்லையா? அப்ப கண்டிப்பாக ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் எங்க ஊருபக்கம் வாங்க.. வந்து அடிக்கிற காத்தில கொஞ்ச நேரம்நின்னு பாருங்க. உங்க தலையிலேயே நல்ல மணலை கொண்டு செல்லலாம். பத்து பேரு வந்தீங்கன்னா ஒரு அறை லோடு மணலை கடத்தி விடலாம். அது சரி.. எதையோ சொல்ல வந்து காற்று திசைமாற்றி விட்டது. அக்பர் வரை எல்லோரும் சேட்டையில் விளையாட ஆரம்பித்து விட்டதால் நாமும் கொஞ்சம்..

எதிர் வரும் வாரம் கல்யாண வாரம்.. பகுத்தறியா பதர்கள் நேரம் காலத்தை பகுத்து.. மூகூர்த்த நாள் இதுன்னு குறித்து வைத்து விடுகிறார்களா? எல்லாநாளும் நல்ல நாளே என்ற நினைப்பு மாறி மூகூர்த்த நாள் எதுன்னு பார்த்து ஒரே நாளில் எல்லோரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை வைத்து விடுகிறார்கள்...அதனால் நமக்கில்ல கண்ணுமுழி பிதுங்குது. ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது. எல்லாமே நெருங்கிய சுற்றமும் நட்பும். எங்க போறது என்ன பண்ணுவது ஒண்ணும் தெரியமாடீங்கிது. கோயமுத்தூரில் ஒண்ணு பொள்ளாச்சியில இன்னொன்னு உடுமலையில் மற்றொன்று பழனியிலும் ஒண்ணு.. உள்ளூரில் ஆறு.... ஏ..அப்பா.. போயி தலையை கூட காட்ட முடியாது போல இருக்குதே.. பஞ்சா பறக்க வேண்டியதுதான்.. எங்க போயி மணமக்களை வாழ்த்துவது...

எதை எதையோ புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்க.. இதுக்கு ஒரு மாற்று உட்கார்ந்து யோசிக்க மாட்டேங்கிறாங்களே. என்னமோ நெனச்சேன்...பதிவும் போட்டுட்டேன்.பதில் போடுங்க...
32 comments:

VELU.G said...

எல்லோருக்கும் ஒரு வாழ்த்து தந்தி ஒன்னு அடிச்சிட்டு கம்முன காத்து வாங்கிட்டு உட்காந்துக்கலமில்ல நீங்க

சத்ரியன் said...

காத்து எங்க விக்கிறாய்ங்க?

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா...உங்க கவலை வித்தியாசமா இருக்கு!

சத்ரியன் said...

காத்து வாங்கலாம்னு இங்க வந்தா, பத்து வூட்டு கல்யாணத்துக்கு ஒத்த ஆளு எப்பிடி போயி சமாளிக்கறதுன்னு ஐடியா கேப்பாங்களாமில்ல...!

ஹுஸைனம்மா said...

//வீட்டுக்குள்ளே மண்ணை கூட்டி மாளாது. பாழாய் போன காத்து என இயற்கையை நொந்தபடி//

நானும் இங்க அப்பிடித்தான் புலம்பிக்கிட்டே ஒரு பதிவு எழுதினேன்!!
//ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது//

பத்திரிகையுமா ஒரே நாள்ல வச்சாங்க? :-)))

வேணுன்னா உங்க சார்பில ஒரு மூணு நாலு கல்யாணத்துக்கு நான் போயிட்டு வர்றேன். (மொய்ப்பணம் உண்டுல்ல?)

:-)))

dheva said...

அடா அடா....காத்து வாங்குறத விட்டு விட்டு கல்யாணத்துக்கு காத்தா பறக்க வேண்டியிருக்கே..! இருந்தாலும் பொறாமையாத்தான் இருக்கு சார்... கண்டிப்பா உங்க ஊருக்கு வர்றேன் சார் உங்கள பாக்குறதுக்கும்...காற்று (காத்து) வாங்குறதுக்கும்.....!

Anonymous said...

காற்று வரும்'னு சொல்லி ஒருத்தர் கம்பி என்னுகிறாரே உங்களுக்கு தெரியுமா..?

vasu balaji said...

இது பெருங்கவலையாச்சே:))

கண்ணகி said...

ஹா...ஹா...நல்ல கவலை...

Mahesh said...

அருமை.... உடுமலைல ஊட்ல சன்னலைத் தொறந்து வெச்சா சுச்சு போடாமயே காத்தாடி மறுபக்கமா சுத்திக்கிட்டுருக்கும்... ஹ்ம்ம்... இங்க இப்ப காத்தாடி கீழயே வாழ்க்கை :(

Chitra said...

குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து நேரில் பரிசும் வாழ்த்தும் வழங்கப் படும். மற்றவர்களுக்கு குரியரில் அனுப்பி வைக்கப்படும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ஜெய்லானி said...

//ஒரே நாளில் பதிமூன்று பத்திரிக்கைகள் வந்துள்ளது. எல்லாமே நெருங்கிய சுற்றமும் நட்பும். எங்க போறது என்ன பண்ணுவது ஒண்ணும் தெரியமாடீங்கிது.//

சினிமாவில டபுள் ஆக்டர் மாதிரி யாரையாவது அனுப்பிடலாமே !!ஹி..ஹி...

பழமைபேசி said...

அண்ணா, நல்லா இருக்கீங்களா?

சிநேகிதன் அக்பர் said...

நல்லவங்களுக்குத்தான் இந்த மாதிரி சோதனைகள்லாம வருது. :)

எங்க சொந்தங்களில் ஒருவர் வைக்கும் தேதியில் மற்றவர்கள் வைக்க மாட்டார்கள்.

நான் பண்ணது சேட்டைன்னு சொன்னீங்கன்னா சேட்டைக்காரன் கோபப்படுவார்.

ஹேமா said...

ஐயா ...உங்க காலத்தவங்களுக்குத்தான் இந்தக் கவலை.இனி வருங்காலத்துக்கு இக்கவலை இல்லை.பழக்கங்கள் மாறிக்கொண்டு வருகிறதே !

மசக்கவுண்டன் said...

மொத ரவுண்டு சொந்தங்களுக்கு மட்டும்தான் போறதுன்னு நானா ஒரு வளக்கத்த ஏற்படுத்திட்டேனுங்க, இல்லீன்னா முடியலீங்க.

பத்மா said...

அப்படியா மண் மழை? இப்போ தான் கேள்விபடறேன் .
எல்லார் வீட்லேயும் தல காமிச்சுட்டு எல்லா வீட்லேயும் ஒரு பிடி பிடிச்சுட்டு வாங்க.ஜமாயுங்க

புலவன் புலிகேசி said...

ஐயா இந்த வாரப் பதிவர் நீங்கதான் டரியலில்

shortfilmindia.com said...

அதென்னவோ கரெக்டுதாங்க..

கேபிள் சங்கர்

நாடோடி said...

காத்து வாங்க‌ வ‌ந்தேன்... ரேட்டு க‌ட்டுப‌டியாகாது போல‌ இருக்கே... ஒரே நாள்ல‌ ப‌திமூணு க‌ல்யாண‌மா?

சமாளிக்கிற‌து கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம் தான்..

Unknown said...

காத்தடிக்கிற புண்ணியத்துல கரண்டு காத்தாடியெல்லாம் நல்லா சுத்துதாமுல்ல. எங்கூர்ல இப்ப 3மணி நேர கரண்ட் கட் இல்லீங்கோ.

க.பாலாசி said...

இன்னும் மூணு மாசத்துக்கு நல்லா காத்துவாங்களாம்னு சொல்லுங்க...

சரிதான்.. அடிக்கிற காத்துல அம்மியே பறக்கும்னா நானெல்லாம் எம்மாத்திரம்...

கல்யாண விசயத்துல எங்க வேலுசார் சொல்றத கேட்டுக்குங்க...

settaikkaran said...

பொதுவா காத்தடிக்கிற பக்கமே நான் போறதில்லீங்கோ! அப்படிப் போறதுன்னாலும் பாதுகாப்பா ஒரு நங்கூரத்தையும் கட்டிக்கிட்டு தான் போறது! :-)

பிரேமா மகள் said...

தாத்தா.. காத்து வாங்க ஊருக்கு வரட்டுமா?

ஜெயசீலன் said...

அய்யா!!! கலக்குறிங்க.....

தாராபுரத்தான் said...

காத்து வாங்கிட்டு இருக்கிற நம்ம பதிவையும் அங்கீகரித்து சென்றுள்ள அனைவருக்கும் நன்றி..நன்றி.

Ahamed irshad said...

விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

ஹேமா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.அன்பும் ஆசீர்வாதமும் கேட்டு வணங்குகிறேன்.

பத்மநாபன் said...

தென் மேற்கு பருவக்காற்று சில்லென்று வீசும் அழகை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்..எனக்கு பொள்ளாச்சி கிராமங்களில் பொலிகளிலும், வரப்புகளிலும், வயல் வெளிகளிலும் நடந்து பள்ளி சென்ற ஞாபகங்கள் தாலட்டியது.. காற்றோடு காற்றாக திருமண சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிட்டீர்களா ?
உங்கள்`` வாழ்க’’ வாழ்த்திற்கு நன்றி.நன்றி...

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

மேற்கொண்ட பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

அன்புடன் நான் said...

VELU.G said...

எல்லோருக்கும் ஒரு வாழ்த்து தந்தி ஒன்னு அடிச்சிட்டு கம்முன காத்து வாங்கிட்டு உட்காந்துக்கலமில்ல நீங்க//

இது இதுதாங்க மிக சரியான வழி... அதனால இதையே வழிமொழிகிறேன்.

பித்தனின் வாக்கு said...

Sir namma uuru katthu pathi arumaiya solli irukkinga.

sir kalyanangalukku pogum pothu ennaiyum kootip ponga ( Osi sappadu poduvanga illaiya)