Friday, March 12, 2010

மனிதம் மறக்க காரணமாகிறது...

நானும் எனது மனைவியும் எங்களூரிலிருந்து பெங்களூருக்கு இரண்டு பை மற்றும் மகளுக்கான அன்பை லக்கேஜ் வழியாக எடுத்துக்கொண்டு அதிகாலையில் சுபயோக சுபவேளைப் பார்த்து புறப்பட்டோம். கூட்டம் குறைவாகவுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் ஏறினோம். முன்பக்கம் ஏறிய எனதருமை மனைவி, நடத்துனர் இருக்கைக்கு இரு இருக்கை தள்ளி அமர்ந்து லக்கேஜ்ஜையும் வைத்து விட்டார். பின்பக்கம் ஏறிய நான் காற்றோட்டமாக அமரலாமே என எண்ணி இருக்கை தேடியபடி இருந்தேன்.

அன்புள்ள மனைவி அழைத்தார். ஏனுங்க..இங்கேயே வாங்க..கூட்டம் ஏதுமில்லை..இறங்குவதற்கும் செளரியமாக இருக்குமென்று அன்புடன் அழைத்தார். அப்போ என் உள் மனசுசொல்லுது..‘டேய் பாசக்காரா..மனைவி பேச்சை கேட்காதே..உனக்கு தோதான இடமா பார்த்து இடத்தை பிடி’என்று..அடப்போ..அன்போடு கூப்பிடறாங்க.. அவிங்க சொல்லை தட்டலாமா? என மனசு சொன்னதை தட்டி விட்டுமனைவி அமர்ந்த சீட்டில் மூன்றாவதாக காலியுள்ள சீட்டில்அமர்தேன். பயணம் இனிதே தொடங்கியது.

ஏறத்தாழ பேருந்து நிரம்பி விட்டது. பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது. நான் சின்னப்பையனா இருக்கும் போது இடம் இல்லை என ஒட்டுனர் கையை அழகா விரித்துவிட்டு சொல்லுவார். பார்க்கவே அழகா இருக்கும், இப்ப அப்படியில்லை. படியில் கூட்டம் நிரம்பி வழிந்தால்கூட கருணை மனம் கொண்ட இந்த கால ஒட்டுனர்கள் பஸ்ஸை நிறுத்தி மனிதப் பொதிகளை அள்ளி போடாத குறையாக ஏற்றிக் கொள்கிறார்கள். அவசர உலகத்தில் பிறந்து விட்ட நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஏறிக்கொள்கிறோம்.

கதைக்கு வருவோம்..ஆனந்தமாக பிரயாணத்தை தொடர்ந்தோம். சுமார் 3 கி.மீ. தூரம் கடந்ததும் பத்து பேர் கொண்ட குடும்பம் பேருந்தை நிறுத்தியது. ஓட்டுனரும் ஓரம் கட்டினார். பத்து பேரும் ஏறினர். பாதிப் பேருக்கு இருக்கைகள் கிடைத்தது. நால்வருக்கு இருக்கைகள் இல்லை. அதில் ஒரு பெரியவரும் பெரியம்மாவும் இருக்கையில்லாமல் என்னருகில் நிற்கின்றனர். நின்றுகொண்டே என்னை பார்த்தார்கள். என்நிலைமை கவலைக்கிடம் ஆகி விட்டது போல் தோன்றியது. அவர்கள் என்னைப் பார்க்க நான் மனைவியை பார்க்க என் இல்லம் மெதுவா சொல்லுது,..‘பேசாம கண்ணை மூடி படுங்க’. மனைவி சொல்லைதட்டாம நானும் கண்ணை மூடி தூங்குவதுபோல் நடித்தேன். எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அடடா..காலை வேளையில் அனைவரும் தூங்கினர். இனி மேலும் நாம தூங்கினா நம்ம ஊருக்கே கெட்டப்பேரு வந்துவிடும் என எண்ணி....திரும்பி திருமதியை ஒரு மொறை மொறைத்து விட்டு எழுந்து பவ்யமாக அந்த பெரியம்மாவை உட்காருங்க அம்மா என கூறினேன். அவரும் அதற்காவே காத்திருந்ததைப்போல அமர்ந்தார்.

வெற்றி புன்னகை யோடு 75 .கிமீ,நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைத்தது. பேசாம ஒரம் சாரமா அமர்ந்து வந்திருப்பேன். மனைவி சொல்லைக்கேட்டு மயக்கம் வரும் நிலை. இது யார் குற்றம்? நமது மாநில போக்குவரத்துத்துறை ஏன் இப்படி தொலை தூர பேருந்துகளில் கூட இருக்கைகளுக்கு மேல் ஆட்களை ஏற்றி ஒரு சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து மனிதத்தையே மறக்க செய்ய காரணமாகிறது.

29 comments:

ஈரோடு கதிர் said...

அண்ணா...

நீங்க பெங்களூருல இருந்தங்காட்டியும் தான்..

ஊரே கொஞ்சம் சூடா இருந்துச்சோ!

//இறங்குவதற்கும் செளரியமாக இருக்குமென்று அன்புடன் அழைத்தார். //

அக்கா புத்திசாலிங்கண்ணா!

கண்ணகி said...

சார்.. தொலைதூரம் செல்லும் பெரியவர்கள் பஸ் பேருந்துநிலையம் வந்து ஏறுவது சவுகரியமாக இருக்கும்...

உங்களைப்போன்ற இளைஞர்கள்..??? இடம் கொடுத்தது உங்கள் பெருந்தன்மையக் காட்டுகிறது..

நாடோடி said...

//வெற்றி புன்னகை யோடு 75 .கிமீ,நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய பாக்கியம் கிடைத்தது.//
ந‌ல்ல‌ அனுப‌வ‌ம்..காலுக்கு பார‌மாக‌ இருந்தாலும், ம‌ன‌திற்கு ச‌ந்தோச‌மாக‌ இருக்கின்ற‌து என்ப‌து உங்க‌ள் வார்த்தையில் தெரிகிற‌து.

க.பாலாசி said...

தொலைதூரம் செல்லும் சில பேருந்துகளில் இவ்விதம் அதிக பயணிகளை ஏற்றுவது கண்டிக்கத்தக்கதே.

பிரேமா மகள் said...

நிஜம்தான் அங்கிள்.. நானும் இந்த வேதனையை அனுபவித்திருக்கிறேன்... சில சமயம் கருணை காட்டவும் மனசு சுருங்க வேண்டியிருக்கிறது..

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைதான், இதே பெங்களூர் பயணத்தின் போது நான் சேலத்தில் இருந்தே நின்று கொண்டுதான் சென்றேன், என்ன கொடுமை சார் இது :(

Chitra said...

பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்தாலே நாம் செல்லும் இடத்தை அடைந்து விட்ட இன்பத்தை நமது மாநில போக்குவரத்து துறை நமக்கு வழங்கி கொண்டுவருகிறது.

......... Super comment!

வானம்பாடிகள் said...

ம்கும். யூத்துன்னு நம்பீட்டம். பெரியம்மா. 75 கி.மீ. வீம்புக்குன்னாலும் செஞ்சிருப்பீங்கண்ணே. ஆனா பாருங்க. நம்மள மாதிரி யூத்துங்களுக்குதான் இந்த மனசு வரும். பாலாசி மாதிரி கெழவனுங்க கண்டுக்கிறவே மாட்டாங்க.:))

பிரபாகர் said...

சில நேரங்கள்ல கண்ண மூடிகிட்டு கூட
போறது நல்லதுன்னு தோனுது. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க!

பிரபாகர்.

பழமைபேசி said...

அண்ணன், அண்ணந்தான்!

பழமைபேசி said...

//மனைவி சொல்லைக்கேட்டு மயக்கம் வரும் நிலை.//

பாலாசியைக் கண்டிக்கிறேன்! மனைவி சொல்லைக் கேட்காததால் மயக்கம் வரும் நிலை என்று வர வேண்டும்.

அண்ணியின் மேல் பழியைப் போடுவது அபாண்டம்!!

ராஜ நடராஜன் said...

//சார்.. தொலைதூரம் செல்லும் பெரியவர்கள் பஸ் பேருந்துநிலையம் வந்து ஏறுவது சவுகரியமாக இருக்கும்...//


கண்ணகியக்கா!பொள்ளாச்சி பேருந்து நிலையத்துல வந்து டிக்கட் ஏதாவது வாங்கி இருக்கீங்களா?அதுவும் பொள்ளாச்சியிலிருந்து அட்டகட்டி,வால்பாறை பஸ் புடிக்கிறதுக்கு.

ராஜ நடராஜன் said...

நானும் ஒரு விதத்துல தாராபுரத்தானுங்க அய்யா!எல்லாருக்கும் அப்பாகிட்ட கையெழுத்து வாங்கி பள்ளிக்கூடத்துல கொடுப்பதுதானே வழக்கம்.ஆனா ஹெட்மாஸ்டர் கையெழுத்தப் போட்ட "சின்ன" தப்புக்கு எனக்கு ஹெட்மாஸ்டர் டி.சிய கிழிச்சிதால தாராபுரம் சி.எஸ்.ஐ போர்டிங்கில தள்ளி விட்டுட்டாரு அப்பா!

தாராபுரத்தான் said...

வாங்க...வாங்க கதிரு தம்பி.

தாராபுரத்தான் said...

என்னம்மா கண்ணகி செவுக்கியமா?

தாராபுரத்தான் said...

நாடோடி தம்பி மகிழ்ச்சி என் மனசுக்குஇல்லையே.

தாராபுரத்தான் said...

அப்படிப் போடு தம்பி பாலாசி்.

தாராபுரத்தான் said...

பிரேமாமகள் மனசு உள்ள எல்லோரும் அனுபவித்துத்தான் ஆகணும் போல இருக்குது.

தாராபுரத்தான் said...

சைவ கொத்துப்புரோட்டா நீங்களும் மாட்டிட்டீங்களா?

தாராபுரத்தான் said...

நன்றி தங்கை சித்ரா.

தாராபுரத்தான் said...

என்னை யூத் பண்ணி நீங்க தப்பிசுட்டு வரறீங்க வானம்பாடிகள்....அண்ணா.

தாராபுரத்தான் said...

கண்ணை மூடினாலும் மனசை மூட முடியலையே பிரபாகர்.

தாராபுரத்தான் said...

வாங்க வாங்க...எங்கே ஞாயம் சொல்ல ஆளை காணாமே அப்படீன்னு பார்த்தேன்.தங்கச்சிகிட்ட சொல்லி சாப்பாட்டை கம்மி பண்ண சொல்லி போடுவேன்.பதிவர் சந்திப்பு குசி..

தாராபுரத்தான் said...

ஒ...நீங்களும் தாராபுற காற்றை அனுபவித்த ராஐயோக தம்பிதானா?

புலவன் புலிகேசி said...

நல்லக் கேள்வி...இதேக் கேள்வி பல முறை என் மனதில் எழுந்ததுண்டு..

அக்பர் said...

//இப்படி தொலை தூர பேருந்துகளில் கூட இருக்கைகளுக்கு மேல் ஆட்களை ஏற்றி ஒரு சில நேரங்களில் மனிதர்களிடமிருந்து மனிதத்தையே மறக்க செய்ய காரணமாகிறது.//

துட்டுதான் சார் காரணம்.

சீட்டுக்குதான் டிக்கெட். எக்ஸ்ட்ராவாக ஏறும் ஆட்கள் கொடுப்பதை இவர்கள் பிரித்து கொள்வார்கள்.

உங்கள் எழுத்து நடை அருமையா இருக்கு சார்.

அக்பர் said...

தங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

ஜெகநாதன் said...

தாராபுரத்தான் (சீட்) 'தரா'புரத்தான் என்று இனி யாரும் ​சொல்லிவிட முடியாதுல்ல..!
தாராபுரம் தயாளத்தை காத்துவிட்டீர்கள்!

நான் இன்று (பெங்களூரிலிருந்து) தாராபுரம் பயணிக்கிறேன். வழியில் எனக்கு ஏதாவது இடுகை சிக்குதான்னு பாக்கிறேன்:))

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
பாலாசி மாதிரி கெழவனுங்க கண்டுக்கிறவே மாட்டாங்க.:))//

ம்கூம்... நம்மள வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராதே....

//பழமைபேசி said...
பாலாசியைக் கண்டிக்கிறேன்! மனைவி சொல்லைக் கேட்காததால் மயக்கம் வரும் நிலை என்று வர வேண்டும்.
அண்ணியின் மேல் பழியைப் போடுவது அபாண்டம்!!//

அய்யா.... நீங்களுமா....(அவ்வ்வ்வ்........)