Tuesday, March 23, 2010

திக்கு முக்கு..திருமண விருந்து...

திருமண விருந்துகளில் திணறியிருக்கிறீர்களா? தலை வாழை இலை போட்டு அழகா மேல் பகுதியில் உப்பு, இனிப்பு, கரிப்பு, துவர்ப்பு, புளிப்பு என உணவு வகைகளை வரிசை கட்டி வைத்து அதை போட்டோ வேற எடுத்து அழகு பார்த்திருப்பார்கள்.

கல்யாணத்திற்கு சென்ற நாமோ சகல வியாதிகளுடன் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். ஐம்பதை தாண்டிய எங்களை சொல்லிக்கிறோம். இலையை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊரும். எல்லா வகையிலையும் தொட்டு டேஸ்ட் பார்த்திட்டு ...நல்லா இருக்குதில்ல.. என பக்கத்து இலைகாரரிடம் பாராட்டி விட்டு வெளியே வந்தா அங்கே ஐஸ்கிரீம், பழம், காப்பி, டீ என இன்னொரு வரிசை... எதையும் விட மனமில்லாமல் அதைக்கொஞ்சம், இதைக்கொஞ்சம் வாயை நனைச்சுட்டு பீடாவோட வெளியே வந்து, சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்து மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக என்ன குறை, என்ன நிறை என படடிலிடுகிறோம். விருந்தில் உணவு வகைகளின் ருசிகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்குது. அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கு அவர் சொல்கிற அயிட்டத்தை நாம் தொட்டுகூட பார்க்காமல் விட்டு வி்ட்டோமோ? எப்படி நம்மகிட்டயிருந்து தப்புச்சு? மனசுலே ஒரு அங்கலாப்பு.


இங்கு சாப்பிட்டு விட்டு செல்கிறவர்களின் மனத்தில் நம்ம வீட்டு விசேடத்தில் இதைவிட அயிட்டங்களை போட்டு அசத்த வேண்டும்... என போட்டி வேறு. யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம். யாரும் இதற்கு வெட்கப்படுவதாக தெரிவதில்லை. இதுஒரு முடிவுக்கு வரவும் போவதில்லை. அரசும் கண்டுக்க போவதில்லை. வேறுஎன்ன செய்ய? நம்ம வீட்டு விசேடத்திலும் தூள் கிளப்ப வேண்டியது தான்.

எதையோ சொல்ல நினைத்து சாப்பாட்டில் புகுந்தாச்சு....கல்யாண வீடு மாதிரி ஆகிகிட்டு வருது பதிவுலகம். என்ன பாக்கறீங்க. காலையிலை தமிழ் மணத்தை பார்த்தா அறுசுவை படைத்து கல்யாண வீடா காட்சியளிக்கிறது. நம்ம போல ஆட்களுக்கு எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்...நேரம்.. காலம்... வேண்டுமே. ஏதோ நம்மால் முடிந்த அளவு படித்து ஒட்டையும் போட்டு, பின்னூட்டமும் போட்டு அப்பாடான்னு நகர்ந்துவந்து... வலைச்சரத்தில் போயிப்பார்த்தா ..கல்யாண வீட்டில் சுற்றமும் நட்பும்னு சொல்லுவதைப்போல் அவர் இடுகையை போயி பார்த்திருகிறீர்களா? அவரை.. இவரை ..என அறிமுக படுத்தும் போது அடடே எப்படி விட்டோம் என நினைக்க தோணுது. அவசர அவசரமா போயிப்பார்க்கும்போது த்து .. சிலன மனதில் எச்சில் ஊறத்தான் செய்யுது. இதைப்போல ஒரு நாளைக்கு எத்தனையோ.. ஒரு ஐந்தை படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் பத்த மாட்டீங்கதே. என்ன செய்ய.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்குமா? தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க ....அப்படித்தானே..வரட்டுங்களா.


23 comments:

ஈரோடு கதிர் said...

கல்யாண விருந்துல கப்புல கறி சோறு போடுராங்களோ!!!

அண்ணே... உங்க டைப்பிஸ்ட் சரியில்லீங்க...

எதுக்கும் அந்தப் பையனுக்கு தாரவரத்துலியே ஒரு பொண்ண பார்த்துருங்க... ஆமா!!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படமே பசிய கிளப்புதுங்கய்யா...திருப்தியா சாப்பிட்டேன் உங்க பதிவ...அருமை

வானம்பாடிகள் said...

//ஈரோடு கதிர் said...

கல்யாண விருந்துல கப்புல கறி சோறு போடுராங்களோ!!!

அண்ணே... உங்க டைப்பிஸ்ட் சரியில்லீங்க...

எதுக்கும் அந்தப் பையனுக்கு தாரவரத்துலியே ஒரு பொண்ண பார்த்துருங்க... ஆமா!!!//

அதானே! இது ஓட்டல் சோறா? தாருங்க டைப்பிஸ்டு?:))

துபாய் ராஜா said...

படமும், பதிவும் அருமை.

க.பாலாசி said...

@@ ஈரோடு கதிர்
@@ வானம்பாடிகள்

ஆமா... நீங்கல்லாம் எந்த படத்த சொல்றீங்க... ரெண்டுபேரும் நல்லா கண்ண தொடச்சிட்டு பாருங்க...

தமிழ் உதயம் said...

உண்மைத்தான் தாராபுரத்தான் சார். எல்லோருக்குமே இந்த நிலைமை தான். எல்லோருமே திக்குமுக்காட வைக்கிறார்கள்.

தாராபுரத்தான் said...

கட்டு சோத்திலே பூனையை வைச்சு கட்டுன்ன மாதிரிக்கு இந்த கதிரும், வானம்பாடியும்..ஏன் பாலாசி...

ச.செந்தில்வேலன் said...

இந்தப் பிரச்சனை எல்லாருக்கும் தாங்க ஐயா :)

அதுக்குத்தான் கூகுள் ரீடர் இருக்குதுங்களே.. உங்களுக்குப் பிடிச்ச் ஐட்டத்த மட்டும் சாப்பிடுங்க..

பழமைபேசி said...

அண்ணா, நீங்க அப்ப நெம்ப முசுவுன்னு சொல்லுங்க...இஃகிஃகி!

நாடோடி said...

//யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம்.//

உண்மைதான் ஐயா.. இதைப் பார்க்கும் போது வ‌ருத்த‌மாக‌ இருக்கும்.. உங்க‌ளுக்கு உள்ள‌ பிர‌ச்ச‌னை எல்லோருக்கும் உண்டு..

புலவன் புலிகேசி said...

இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் இருக்கு...

Chitra said...

திக்கு முக்காடி போகிறோம். எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரிவதில்லை.

ஜெயந்தி said...

//புலவன் புலிகேசி said...
இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் இருக்கு...//

ஆமாம்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு அய்யா,பாலோவர்ஸ் வச்சு, அதில் வரும் பதிவுகளைப் படிக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு பதிவுகளைப் போட்டுவிட்டு. மற்ற நாட்களில் பின்னூட்டங்களை போட்டுத் தள்ளலாம். நம்ம ஊரு எப்படி இருக்குங்க.

பித்தனின் வாக்கு said...

நம்ம ஊரு ஹனுமந்தராயர் கோவில் படம் போட்டு, இன்னிக்கு ஒரு பதிவு எழுதியுள்ளேன். படிக்கவும். நன்றி.

அக்பர் said...

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க எல்லோரோட நிலமையும் இதுதான். பாருங்க பதிவு போட்டு ஒரு நாள் கழிச்சுதான் இங்கு வரமுடியுது. இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருந்திங்கன்னா இந்த பதிவை யாரும் படிக்க முடியாது. என்ன செய்றது படிச்சது போக வேலையும் பார்க்க வேண்டியிருக்கே.

ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் சாப்பாடு படத்தை போட்டு வயித்தெரிச்சலை கிளப்பிட்டிங்களே. (ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இதெல்லாம் இங்கு கிடைக்காது) :)

Anusha raman said...

It is a Nice Blog.i enjoyed this blog.If any extra food they can send orphanage home
thanks and regards
Anusha.R

கண்ணகி said...

ஆமாங்க...சார்....ஆமாம்.. எதைபடிக்க், எதை விட..

நாளுக்கு நாள் மெருகேறுகிறது..எழுத்தும், கருத்தும்...

பிரேமா மகள் said...

ஏன் தாத்தா இப்படி பண்ணறீங்க.? ஏற்கனவே எங்க பாலா அண்ணா கல்யாண ஆசையில் ரெக்கை முளைச்சு பறக்கறார்.. இதில் நீங்க வேற விருந்து பத்தி எழுதி இருக்கீங்களா? ஸ்டேட்டஸ் மெஸேஜா போட்டடு தன் ஆதங்கத்தை காட்டறார்... என்ன பாலான்னா விருந்து போட்டிரலாமா ?

நசரேயன் said...

பதிவுலக பிரச்சனையே இது தான் ஐயா

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை . சிறந்த கருத்துகளுக்கும்,
நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் அமைகிறது . தொடர்ந்து எழுதுங்கள் .

பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !

அப்பாவி தங்கமணி said...

அழகா எழுதி இருக்கீங்க...பசி நேரத்துல படிக்கறப்ப இன்னும் ஸ்வரச்யமாதான் இருக்கு

பட்டாபட்டி.. said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை . சிறந்த கருத்துகளுக்கும்,
நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் அமைகிறது . தொடர்ந்து எழுதுங்கள் .

பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !
//

அண்ணன் பிரச்சனைக்கு ஒரு பதில சொல்லுங்க சங்கர் சார்..