Monday, March 15, 2010

எனக்கு பிடித்தப் பெண்கள் (தொடர் பதிவு) அக்பர் தயவு...

எனக்கு பிடித்த பெண்கள் (மாட்டி விட்ட மகராஐன் அக்பர்) என்னையும் மதித்து அழைத்த அன்புள்ள சிநேகிதா...

அன்னை தெரசா, தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி... இவர்களெல்லாம் நானும் நீங்களும் படித்து அறிந்த பெண்களில் பிடித்தவர்கள்.

இன்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களின் திறமையான பேச்சுக்கள், செயல்பாடுகளை பார்க்கும் போதும் படிக்கும் போதும் நச்சுன்னு நம்ம மனசுல ஒட்டத்தான் செய்யறாங்க. சமீபத்தில் கூட மேடை ஆளுமையில் தமிழ்ச்சி தங்க பாண்டியன் சிறப்பாக செயல் பட்டதாக படித்ததும் நச்சுன்னு ஒட்டத்தான் செய்யறாங்க.

படித்ததில் பிடித்தவர்கள்... பார்த்ததில் பிடித்தவர்கள்... பழகியதில் பிடித்தவர்கள்..... நமதுவாழ்க்கையில் நாம் பார்த்து பழகிய பெண்களில் நச்சுன்னு ஞாபகம் வருகிற பத்து பெண்கள் பற்றி தொடர் பதிவுகள் படிக்கும் போதெல்லாம் நினைப்பேன்.....

நெ.ஒண்ணு....

நமது கிராமபுறங்களில் அரசு ஊழியர்களாய் கிராம நல செவிலியர்கள்(v.h.n) என்ற பெயரில் பயணிபுரிந்து வருகின்ற அந்த சகோதரிகளை அருகில் இருந்து பார்த்ததால் எனக்கு நெ.ஒண்ணாக தெரிகிறார்கள். தமிழக கிராமப்புறங்களில் அரசு கட்டித்தந்த அறைகுறை குடியிருப்புகளில் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் அடைத்துக்கொண்டும், கிராமபுறத்தில் எந்த கல்வி கிடைக்கிறதோ அதை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, மக்கள் சேவையே மகேசன் சேவை என பலர் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அன்பு சகோதரிகளின் வாழ்க்கையின் ஒரங்களை ஒரளவு தெரிந்ததால் நினைச்சவுடன் தெரிகிறார்கள்.


எண் இரண்டு......

ஒவ்வொரு நாளும் பேருந்தில் செல்லும் போது அதிகாலையில் தளவாய்ப்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து பஸ் ஏறுவார்கள். ஐம்பது அறுபது பேர்கள் ஒரே சமயத்தில் அறுவாளும் கையுமாக...வயல் அறுக்க..நாத்துநட... அவர்களுக்கு தெரியுமா ?? நாம நமக்காக மட்டுமல்ல...இந்த உலகத்திற்கே உணவு கொடுக்க பணி புரிகின்றோமென்று...மறக்கவே கூடாத மகராசிகள்.


மூன்று....


தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆச்சரிய பெண்கள். அவுங்க வாங்கற சம்பளத்திற்கும் செய்கின்ற பணிகளுக்கும் தொடர்பு உள்ளதா? கடந்த இருபது வருடங்களாக நமது குழந்தைகளின் கல்வித் தரம் உயர காரணமானவர்கள் அவர்கள் அல்லவா? நன்றிக்குரிய அந்த சகோதரிகளில் பலர் எனக்குப் பிடிக்கும்.


நெ.4.


அங்கன்வாடிப் பணியாளர்கள்....என்னும் அந்த அன்பு சகோதரிகளில் பலர் கிராமப்புறங்களில் மவராஐன் கொண்டு வந்த சத்துணவு மையத்தில் உணவு தயாரித்து விவசாயக் கூலி வேளைக்கு சென்றுவிட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாயினும் சாலப்பரிந்து உணவு ஊட்டும் அழகை ஒரே தடவை பாருங்கள்... உங்களுக்கும் அவர்களைப்பிடிக்கும். அரசு பணி என்றாலும் சேவை செய்ய ஒரு மனசு வேணும்... சேவை செய்யும் போது பார்த்த பலரைத்தான் பிடித்ததாக சொல்கிறேன்.


ஐந்து....


நகர வாழ்க்கையில் நகரவே முடியாத இடத்தில் இருப்பவர்கள். நீங்கள் தினமும் இவர்களை சந்தித்தே ஆக வேண்டும். அவர்கள் ஐவுளிக் கடைகளில் சேல்ஸ் வுமன்களாய், டெலிபோன் பூத் சகோதரிகளாய், இன்னும் பிற இடங்களில் பணி புரியும் அன்பான உபசரிப்புகளையே மூலதனமாக்கி வாழ்க்கையை நகர்த்தும் அந்த நகரா சகோதரிகளில் பலரை நான் அறிவேன்.


.6.


அக்பர் எழுதியதைப்போல தயிர், பால், கீரை என கூவி கூவி சத்தம் போட்டு அழைத்து நமக்கும் நமது குழந்தைகளுக்கும் சத்தை தரும் பெண்கள். இப்படி உழைக்கும் பெண்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும்.

இவர்களில் பத்து பேரை மட்டும் அடையாளம் காட்டுவது சரியல்ல. இவர்களில் சேவை உணர்வை மதித்து பலரின் பெயர், குடும்ப பின்னணி உட்பட அறிந்து வைத்துள்ளேன். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால்...நம்மால் முடிந்தது.. அவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் பெற்று தருதல், மருத்துவ ஆலோசனை மறறும் உதவி பெற்றுத் தருதல் இப்படி செய்து கொண்டே இருப்போம்..இருங்கள்.... யாரும் உங்களை வாழ்த்த வேண்டாம்... எந்த கோவிலுக்கும் போக வேண்டாம்..... நமது குழந்தைகள் நல்லா இருக்கும் என்று நம்புவோம்.


நன்றிங்க அக்பர்....


45 comments:

பிரேமா மகள் said...

அய்யோ.. தாத்தா.. கை கொடுங்க... பின்னிட்டிங்க... உண்மையாகவே தலைப்புக்கு ஏற்ற சரியான கட்டுரை... இதுவரைக்கும் எல்லாம் நெட்டில் தேடிப் பிடிச்சு.. இல்லை தெரிஞ்சதை வெச்சு எழுதறாங்க.. தாத்தா.. நீங்கதான் உண்மையா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க......... சூப்பர்....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அசத்திட்டீங்க..:))

வானம்பாடிகள் said...

அண்ணே. போட்டீங்க பாருங்க போடு. இந்த தொடரில வந்ததில நெம்பர் ஒன்னு இதான்னு சொல்லுவேன்:)

க.பாலாசி said...

அய்யா... தலைப்பச் சொன்னவுடனே நீங்களும் உங்க அனுபவத்துல வரலாற்றுப் புத்தகங்கள்ல குறிப்பிடப்பட்டுள்ள பெண்களைத்தான் சொல்லியிருப்பீர்கள் என்றே எண்ணினேன். ஆனா படித்த பிறகுதான் தெரிந்தது.

இன்றையநாளில் நம்முடனே பயணிக்கும் சகப்பெண்மணிகளை தாங்கள் குறிப்பிட்டமை எனக்கும் பெருமையளிக்கிறது.

ஈரோடு கதிர் said...

தூள்..

நிஜமான எழுத்துக்கு வணக்கம்

ஈரோடு கதிர் said...

// பிரேமா மகள் said...
அய்யோ.. தாத்தா.. கை கொடுங்க...//

அண்ணா.. இந்த பொண்ணுக்கு இதே வேலையாப் போச்சுங்க..

நீங்க கம்னு இருங்க..

அது கேக்குதேன்னு கைய கொடுத்துட்டா... கைக்கு என்ன பண்றது... அப்புறம் எப்புடி இடுகை எழுதறது /பின்னூட்டம் போடறது...

சி. கருணாகரசு said...

உயிரோட்டமான பதிவு... உங்க பார்வை மிக அழகு.

Chitra said...

பாராட்டுக்குரிய பெண்கள். :-)

தாராபுரத்தான் said...

ஊக்கு விக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பானாம்....

தாராபுரத்தான் said...

பிரேமா மகள்...சங்கர்....வானம்பாடிகள் யார் வராமல் போனாலும் நீங்க கண்டிப்பா வருவீங்க உங்களுககு பயந்தே எழுத வேண்டியதாகி விடுகிறது. எல்லாம் உன் செயல் பாலாசி.........ஈரோடு கதிர் சரியான ஊக்கு....வாங்க .சி. கருணாகரன்.....அன்புடன் சித்ரா....நன்றியோ நன்றி.

கண்ணகி said...

யாரும் உங்களை வாழ்த்த வேண்டாம்... எந்த கோவிலுக்கும் போக வேண்டாம்..... நமது குழந்தைகள் நல்லா இருக்கும் என்று நம்புவோம்.


இதைவிட யாரும் சொல்லமுடியாது...

அனுபவம் பேசுகிறது...

அக்பர் said...

அழைப்பிற்கு மதிப்பளித்து எழுதியதற்கு நன்றி சார்.

அனுபவத்தில் பார்த்த பெண்களை நினைவு கூறியது மகிழத்தக்கது.

//யாரும் உங்களை வாழ்த்த வேண்டாம்... எந்த கோவிலுக்கும் போக வேண்டாம்..... நமது குழந்தைகள் நல்லா இருக்கும் என்று நம்புவோம்.//

அருமை சார்.

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணாச்சி கலக்கிப்புட்டீங்க...
உண்மையை எழுதியதுற்கு நன்றி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையாக உங்கள் அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொண்டீர்கள். இவர்களை எனக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி தாராபுர சார்.

பாவக்காய் said...

ரொம்ப அருமை !!!

Rajalakshmi Pakkirisamy said...

Excellent

தாராபுரத்தான் said...

கண்ணகிக்கும்........அக்பர்ருக்கும்.......நாஞ்சில்பிரதாப்புக்கும்.......ஸ்டார்ஐான் அவர்களுக்கும்......ராஐலட்சுமி பக்கிரிசாமி உட்பட உங்க எல்லோருக்கும் வணக்கத்துடன் நன்றி..ங்கோ.

தாராபுரத்தான் said...

இந்த பதிவில் வேண்டும் என்றே ஒரு எழுத்து பிழை ..கண்டு பிடித்து சொல்லுங்..கோ.

Dr.P.Kandaswamy said...

அன்புள்ள தாராபுரத்தான்,

நீங்க என்ன ஒரம் விக்கற டிபார்ட்மெண்ட்டிலயா வேலை பாத்தீங்க?

"ஒரங்களை" "ஒர(அ)ளவு" எல்லாம் தெரியும்போல இருக்கு! :)

பித்தனின் வாக்கு said...

இத்தொடரில் நான் வாசித்த பதிவுகளில் மிகவும் சிறந்த சிந்தனைகள் உடையது உங்களின் பதிவு. மிக ஆழமான அற்புதமான எண்ணங்களைப் பதிந்து, இத்தொடரில் சும்மா கும்மி அடித்த எங்களுக்குப் பாடம் கத்துக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி அய்யா. நான் மறுமுறை தாராபுரம் வரும் போது அவசியம் தங்களை சந்திக்க வேண்டும்.

புலவன் புலிகேசி said...

//ஒவ்வொரு நாளும் பேருந்தில் செல்லும் போது அதிகாலையில் தளவாய்ப்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து பஸ் ஏறுவார்கள். ஐம்பது அறுபது பேர்கள் ஒரே சமயத்தில் அறுவாளும் கையுமாக...வயல் அறுக்க..நாத்துநட... அவர்களுக்கு தெரியுமா ?? நாம நமக்காக மட்டுமல்ல...இந்த உலகத்திற்கே உணவு கொடுக்க பணி புரிகின்றோமென்று...மறக்கவே கூடாத மகராசிகள்.
//

எண் இரண்டுக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன்....

ஜெய்லானி said...

தனித்து ஒருவரை எழுதாமல் கூட்டாக, கூட்டமாக பலரையும் எழுதியது. உன்மையிலேயே பாராட்ட வேண்டியவர்கள் தான். வாழ்த்துக்கள்.

நாடோடி said...

அனுபவித்து எழுதிய பதிவு... அனைத்தும் அருமை..

KarthigaVasudevan said...

nice post
:)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கல் நண்பரே !

அருமையான சிந்தனை !

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி !

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்படிதாங்க நம்ப பெருமைய வெளிபடுத்தனும்...இதுதான் எதார்த்தமான அழகு பெண்கள்...பிரம்மிக்க வெச்சுட்டீங்க...

தாராபுரத்தான் said...

டாக்டர் அய்யா வணக்கம்.

தாராபுரத்தான் said...

பித்தனின்வாக்கு வாங்க தம்பி சந்திப்போம்.

தாராபுரத்தான் said...

உங்க வாழ்த்துக்களை வாங்கிகொள்கிறேன் ெஐய்லானி.

தாராபுரத்தான் said...

உண்மை இனிக்கும் நாடோடித்தம்பி.

தாராபுரத்தான் said...

கார்த்திகா வணக்கம்.

தாராபுரத்தான் said...

நன்றிங்க பனித்துளி..

தாராபுரத்தான் said...

வணக்கம் ஆர்.கே. சதிஸ்.

திவ்யாஹரி said...

superb post..

தமிழ் உதயம் said...

நன்றி சார். உழைக்கும் பெண்கள் நினைவு கூர்ந்தமைக்கு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பிரேமா மகள் said...

ஈரோடு கதிர் said...
அது கேக்குதேன்னு கைய கொடுத்துட்டா... கைக்கு என்ன பண்றது... அப்புறம் எப்புடி இடுகை எழுதறது /பின்னூட்டம் போடறது...

உங்களால மட்டும் எப்படி அங்கிள், இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

பழமைபேசி said...

அண்ணா, அலுவலகத்துல இடுகை வாசிக்கலாம்; ஓட்டுப் போடலாம்... ஆனா திண்ணைக்கு வர முடியாது...அதான்!

தாராபுரத்தான் said...

திவ்யா ... நன்றி.

தாராபுரத்தான் said...

நன்றிங்க தமிழ்உதயம்.

தாராபுரத்தான் said...

பனித்துளியை பார்க்க பார்க்க மகிழ்ச்சிதான்.

தாராபுரத்தான் said...

அதைவிடு பிரேமா..அந்த மாமன் எப்பவும் அப்படித்தான்.

தாராபுரத்தான் said...

அப்பா நிம்மதி்..வனத்திலே போயி மேய்சாலும்...

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர் சார்!! நல்லா எழுதிருக்கிங்க.தங்கள் வலைதளம் நன்றாக உள்ளது...

Elam said...

அய்யா ரொம்ப அழகா அருமையான சொல்லி இருக்கீங்க .....
உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது ரொம்ப இருக்கு

நன்றியுடன்,
இளமுருகவேல்