Tuesday, February 16, 2010

நாட்குறிப்பு...


உங்களுக்கு டைரி எழுதுற பழக்கம் உண்டா? அந்த காலத்திலே நாங்களும் எழுதினோமில்ல..பார்க்கிறீங்களா?? நான் எழுதியதை 25 வருடங்கள் கழித்து படித்து பாருங்களேன். எப்பொழுதெல்லாம் மனது கனமாக இருக்கிறது எனக் கருதுகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நகலெடுத்து வைத்திருக்கும் டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தால் மனம் லேசாகிவிடும். நானும் ஒரு சில வருடங்கள்தான் எழுதினேன். அப்புறம்...கல்யாணம் ஆகிப்போச்சு....எல்லாம் இவ்வளவு தான். இதுக்கு போயி எதுக்கு? என்ற சலிப்பு. இதோ என் 1981 ஆம் ஆண்டின் டைரி எனக்கு சுவாரசியமான பக்கங்கள் ...உங்களுக்கு எப்படி இருக்குதுன்னுதான் சொல்லுங்களேன்.


அட்டையில்....அனுமதியின்றி.....படிக்காதீர்கள் என்று எழுதியிருந்தேன். இப்போது நான் கூறவில்லை.


ஐனவரி.1. தமிழகத்தில் விவசாயிகள் சிலர் காவல் துறையினரால் சுடப்பட்டார்கள் என்ற துயரச் செய்தியை தாங்கியபடி புத்தாண்டு பிறந்தது.


ஐனவரி.4. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு.


ஐனவரி.7. நீ உன் பார்வையால் கேட்கும் கேள்விகளின் நியாயம் புரிகிறது. உன் மேல் எனக்கு கோபமில்லை. (ஒருகாலத்தில்...............இது இப்போ இந்த அளவில் நிறுத்தியிருக்கிறேன். இதற்குள் ஒருகதையே உள்ளது. அதற்கு தனிப்பதிவு.)


ஐனவரி.19.

பருவத்தின் வாசலிலே

தண்ணீர் குடமெடுத்து

இளங்குமரி நடக்கையிலே

தளதளப்பது

தண்ணீர்க் குடம் மட்டுமல்ல

இளைஞ்ர்களின் உள்ளமும் தான்.

அவளின் ஈரச்சேலை கூட

அவர்களுக்கு வெப்ப கதகதப்பைத் தந்து விடுகிறதே........மு.மேத்தா.


(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)


பிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.


பிப்ரவரி.18. பாவம் பெண். வாழ்க்கையை சரிவர நடத்த தெரியாதவனிடம் சிக்கி சீரழியும் போது என்ன நினைப்பாள். உணர்வுகளை மதிக்க தெரியாதவனிடம் மாட்டி கொண்டவளின் நிலையை எண்ணி கலங்கினேன். வேறென்ன செய்ய முடியும். (ருக்குமணியை நினைத்து)


மார்ச்.30.

உணர்ச்சி சூறாவளியின் மைய மண்டபத்தில்

மனித ஈசல் தவியாய் தவிக்கிறது.

பின்னிப்பின்னி தொடரும் ஆசைகளால்

மனித உள்ளம் கண்ணாடித் துண்டு போல் சிதறுகிறது...

கண்கள் போக முடியாத தூரத்திற்கு நினைவுகள் ஒடுகிறது.


ஏப்ரல்.1. ஏமாறவுமில்லை.....ஏமாற்றவுமில்லை.


ஏப்ரல்.22.

இரவு அங்கே விருந்து.

நான் உன்னை மறந்திருப்பேன்.....

நீ எனனை மறந்திருப்பாய்....

அதனால் சூழ் நிலை நம்மை மறந்திருந்தது.


ஏப்ரல். 23.

மாரியம்மன் தேர்த்திரு விழா

நான் தேரையும் பார்க்க வில்லை.....

யாரையும் பார்க்க வில்லை.

நீ என்மேல் கொண்ட அன்போ...

நான் உன்மேல் கொண்ட அன்போ....

குறைந்து விட்டது என்றுதானே பொருள்.....


அய்யா இன்னைக்கு இது போதும். எனக்கே போர் அடிக்குது. உங்க ஆதரவை பார்த்த பின்பு........வரேன்ங்க..வருவேன்ங்க......



31 comments:

vasu balaji said...

வாங்க :)

ஜாபர் ஈரோடு said...

சீக்கிரம் வாங்க.....

ஹேமா said...

ஐயா..உங்களுக்குப் பயம்.இன்னும் இருக்கிறதெல்லாம் சொல்லிட்டா மாட்டிக்குவோமோன்னு !

நாடோடி said...

நான் பிறக்குறதுக்கு முன்னாடி உள்ள வருடத்தின் நினைவலைகளை அசை போடுகிறீகள்...என்னால் வாழ்த்து தான் சொல்ல முடியும்..

புலவன் புலிகேசி said...

/(எதற்கோ அன்று எழுதி வைத்திருக்கிறேன். அதெல்லாம் இப்பவே சொல்ல முடியுமா..பொறுங்க.)//

எனக்குப் புரிஞ்சிருச்சி...

ஆரூரன் விசுவநாதன் said...

ஐயா, சீக்கிரம் மீதியையும் எழுதுங்க....

ரசிக்கும் படியான வரிகள்

ஈரோடு கதிர் said...

நானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....


மாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க

பாலாசி நீ பொறந்திட்டியா அப்போ!!??

அண்ணாமலையான் said...

பொட்டிய தொறந்துட்டீங்க..

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
நானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....
மாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க
பாலாசி நீ பொறந்திட்டியா அப்போ!!??//

இல்லீங்க...82-லத்தான் உலகத்தையே பாத்தேன்...

பழமைபேசி said...

ஏப் 23... இன்னும் கொஞ்சம் விளக்கமா இப்ப எழுதலாம்னு நினைக்குறேன்... இஃகி!

பழமைபேசி said...

////ஈரோடு கதிர் said...
நானெல்லாம் வெரலு சூப்பிக்கிட்டு ஒன்னாங்கிளாஸ் படிக்கிறப்பவே அண்ணன் என்னென்னமோ எழுதியிருக்காரே....
மாப்பு அப்போ நீங்க மூனாம்ப்பு படிச்சீங்க//

ஆமாங் மாப்பு, சந்தையில ஐஸ் வாங்கித் திங்றதைத் தவிர எனக்கு எதுவும் ஞாவகத்துல இல்ல... தாராபுரத்து அண்ணன் கொஞ்சம் அவரு டைரி பூராவும் தெறந்து விட்டா நெம்ப நல்லா இருக்கும்!

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
இல்லீங்க...82-லத்தான் உலகத்தையே பாத்தேன்...//

அப்புறம் என்ன...
அதான் 27 வயசாகுதுல்ல... இன்னும் விரல் சூப்பிகிட்டு..

எடு கைய... படவா

Unknown said...

இனி நாங்களும் திரும்ப டயரி எழுத போறம் வயது போன இது பத்தி எழுதலாமுள்ள

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அப்புறம் என்ன...
அதான் 27 வயசாகுதுல்ல... இன்னும் விரல் சூப்பிகிட்டு..
எடு கைய... படவா//

பயக்கதோசம்...விடுங்க...

angel said...

நான் பிறக்குறதுக்கு முன்னாடி உள்ள வருடத்தின் நினைவலைகளை அசை போடுகிறீகள்...என்னால் வாழ்த்து தான் சொல்ல முடியும்.

repeat

angel said...

V.A.S.SANGAR said...
இனி நாங்களும் திரும்ப டயரி எழுத போறம் வயது போன இது பத்தி எழுதலாமுள்

very good idea but if the teacher sees..........

Chitra said...

அட்ரா சக்கை .......... கவிதைகள் தூள் பறக்குது.
next 1982 diary......?
:-)

தாராபுரத்தான் said...

வானம்பாடிகள்.. ஐாபரு.. ஹேமா..நாடோடி..புலவன் புலிகேசி..அய்யா ஆருரான் அவர்களே...ஈரோடு கதிர்...அண்ணாமலையான் தம்பி...பாலாஐிஉடன் பிறப்பு....பழமை பேசி இரத்ததின் இரத்தம்....ஏஞ்சலு..எல்லோருக்குமம் ....நன்றியோ நன்றி....

தாராபுரத்தான் said...

உண்மையிலேயே வயது குறைந்த மாதிரிக்கு இருக்குதுங்கோ...நன்றி..நன்றி..நன்றி..கண்ணதாசன் சொன்ன மாதிரி....ஊக்குவிற்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட தேக்கு விற்பான்.

திவ்யாஹரி said...

வாங்க.. வாங்க..

பழமைபேசி said...

//உண்மையிலேயே வயது குறைந்த மாதிரிக்கு இருக்குதுங்கோ...//

நாங்க உங்களை எங்கசோட்டு ஆளாட்டம்தான் நினைச்சுட்டு இருக்கோமுங்க...

Nathanjagk said...

பழைய நாட்குறிப்பு... பருவத்தின் வாசம்..
ரொம்ப நல்லாயிருக்குங்க!
1981.... எனக்கு ஒரு வயசு அப்ப!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முரட்டுக்காளை படத்தைப் பற்றி எழுதியை கணக்கில் கொண்டுவரவில்லையே ஐயா..,

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அப்பா..அடுத்த பதிவு
" 1981 -ஒரு காதல் கதை" தானே..?

ரோஸ்விக் said...

அடுத்தவங்க டைரி படிக்கிறது ஒரு சுகம் தான்... அதுவும் எழுதுனவங்களே படிச்சுகாட்டுற மாதிரி இருக்கிறது இன்னும் சுகமா இருக்கும்.... எழுதுங்க பங்காளி (அட... உங்களுக்கும் இனி நம்ம வயசுதான் வாங்க :-))

உண்மையிலேயே சுவாரஸ்யமா இருக்கு... தொடர்ந்து பக்கங்களை புரட்டுங்க... :-)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அய்யா,

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷ்மாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்.

டைரியை படிப்பது ரொம்ப சுவாரசியமானது. அதுவும் அடுத்தவங்க டைரினா இன்னும் அதிகம்.

//பிப்ரவரி.17. அமுதா. எனது அண்ணியின் தங்கை இறந்த செய்தி கேட்டு ஊருக்குச் சென்றேன். இறந்த காரணத்தை கேட்டு திகைத்தேன். பாவம்..சிறு பெண்..நினைவுகளை பின்னோக்கி அந்த பெண்ணை நான் சந்தித்த நேரங்களை நினைத்து உரையாடல்களை அசை போட்டேன்.
???

இவன்,
தஞ்சை.வாசன்

தாராபுரத்தான் said...

V.A.S.SANGAR ,திவ்யாஹரி,சித்ரா, ஐகநாதன், டாக்டர், திருநா.பழனிசாமி,ரோஸ்விக்,தஞ்சை.ஸ்ரீ.வாசன் அனைவருக்கும் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

ஆகா அப்படியா. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...

பிரேமா மகள் said...

என்ன அங்கிள். பிளாஸ்பேக் ஓட்டறிங்களா?... எப்படி தாரா புரத்தில் இருந்து சைக்கிள் வருமா?

கமலேஷ் said...

அய்யய்யோ ...எங்களுக்கு போர் அடிக்கலங்க...மேலதிக சுவாரஸ்யமான சம்பவங்களை எழுதுங்க..(எனக்கு டைரி எழுதுறதுன்னா ரொம்ப பிடிக்கும் நான் உண்மையா இருக்கிற ஒரே இடம் அதுதான். பிரச்சனையும் அதுதான்)

தமிழ் உதயம் said...

இன்று டைரி எழுதுவதில்லை. அதனால் என்ன. வலைப்பூக்களில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதுகிறோமே.