ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இதனை கஷ்டபடுகிறாய் ?
நான் கேட்டேன் - கஷ்டபடாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் !
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப்பார் ,
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைகாட்சியில் படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!
உழைக்காமல் எப்படியப்பா இதனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி சொன்னார்,
நான் யார் தெரியுமா ? தமிழ் நாட்டு குடி மகன்,
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ருபாய் ,
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம் ,
பொழுது போக்கிற்கு வண்ண தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடபுத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்,
ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடம் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும் !!
வியந்து போனேன் நான்!!
என் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையுட்டு, மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சொம்பெரிகளகிறாய்,
இலவசம் நின்று போனால், உன் நிலை ?
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் !
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை.
தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில்
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!
இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்... சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்...
Monday, January 18, 2010
நீ தமிழனா?? (படித்ததில் பிடித்தது)
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
மனம் நொந்து திரும்பினேன் இந்நிலை கண்டு... தமிழகமே விற்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை நிலை! குக்கிராமங்களிலே கூட ஒரிசா மற்றும் பிகார் மாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாய்... இனி அவன் இங்கேயே வீடு நிலமும் வாங்கக் கூடும். நம்மவர் இலவசமே கதியாய், அடுத்த சந்ததியை அகதிகளாயும் மாற்றக் கூடும்.
நல்ல இடுகை அது. பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
கருத்துப் பிழையுள்ள கவிதையிது!
தொலைக்காட்சி இலவசமாகக் கொடுப்பது தவறு.
இலவச மருத்துவ சேவை, இலவச கல்வி இதெல்லாம் அரசாங்கத்தின் கடமைகள் அய்யா!
ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை பேசி, வானம்பாடி,ஜாய்ஆனந்த்.
இலவசம் நின்று போனால், உன் நிலை ?
உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் ! ..............பயங்காட்டாதீங்க, ஐயா. கொள்ளையடிச்சிட்டு தப்பிச்சு போக, அரசாங்கமே இலவசமா கார் ஒண்ணு கொடுத்துடும்.
ஹஹஹஹ சூப்பர்... இலவசம் என்ற மாயையில் இருக்கும் தமிழ்மக்களுக்கு இன்னும் புரியவில்லை இலவசம் என்றபேரில் கோடிகள் கொள்ளையடிப்படுகிறதென்று...
இலவசங்கள் எந்த ரூபத்தில் தரப்பட்டாலும் மக்கள் அதை தவிர்க்க வேண்டும்.
தங்களின் சுயமரியாதையை இழந்துதான் இததகைய இலவசங்களை பெறுகிறோம் என்பதை உணர வேண்டும்.
நல்ல பகிர்வு..
இலவசம் இலவசம் என கொடுத்து எல்லோரையும் கையேந்த வைத்துவிட்டார்கள்...
ஏழைகளுக்கு, உழைக்க முடியாதவர்களுக்குத் தருவதைக் குறை சொல்ல முடியாது. வளர்ந்துள்ள நாடுகள் எல்லாவற்றிலும் இவையுண்டு.
இதைப் பயன் படுத்தும் ஏமாற்றுக் காரர்களும், உடல் ஊனமில்லாதாரும் உறவினர்களாலேயும், நண்பர்களாலும் காரி உமிழப் பட வேண்டும்.
ரேசன் அட்டையைப் பயன் படுத்தி இந்த உதவிகளைப் பெறும்,காஷ் சிலிண்டர் பெரும் செல்வந்தர்களைப் பார்த்துள்ளேன்.வெட்கங் கெட்டதுகள்.
உழைக்க முடிந்தவர்கள் உழைக்க வேண்டும்.
ஊரை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.
பல கோடிசுவரர்கள் பணக்காரர்கள் ஆனதே அடுத்தவர்களின் உழைப்பாலும், ஊழல் செய்துந்தான்.
இலவசம் என்பதை அலவன்ஸ், போனஸ், லாபப் பங்கீடு, இழப்பீடு, ஊக்கத் தொகை, கருணைத்தொகை என்று அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் இலவசங்களைப் பெறுவதில் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்காது.
தாய்ச் சிறுமிக்கு (minor mother) ஊக்கத் தொகை வழங்குகிற மேற்கத்திய நாடுகளுக்கு நாம் தேவலை.
அன்புடன்
256த்தான், காந்திபுரத்தான்
தாராபுரத்தான் -
நானும்தான்
சிந்திக்க தூண்டும் இடுகை. பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
ஒவ்வொரு வரியிலும் சாட்டையடி.
சித்ரா,நாஞ்சில் பிரதாப்,திருநா.பழனிச்சாமி,சங்கவி,யாரோ,ஐகநாதன்,அக்பர் அனைவருக்கும் வருகைக்கு நன்றிங்கோ.
//
ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை பேசி, வானம்பாடி,ஜாய்ஆனந்த்
//
Thanks, but my name is Joe not joy! ;-)
அருமையான பதிவு.. ஒவ்வொருவரும் அவரவர் மின்னஞ்சலில் இதை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..அனவருக்கும் சென்றடைய வேண்டும்
Post a Comment